English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sincerely
adv. உள்ளார, மனமார்ந்த நிலையில், உண்மையாக, நாணயமாக.
Sincerity
n. வாய்மை, நேர்மை, மனமார்ந்த நிலை, கபடின்மை.
Sinciput
n. முன்மண்டை, நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பகுதி.
Sine
-1 n. நெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.
Sine
-2 prep. இல்லாமல், பெற்றிராமல்.
Sine die
adv. எல்லை வரையறையின்றி, நாள் குறிப்பிடாமல் ஒத்திப் போடப்பட்டு, நாள் குறிப்பிடாமல்.
Sine qua non
n. இன்றியமையாத் தகுதிக்கூறு, உயர் நிலையான முற்படு காரணக்கூறு.
Sin-eater
n. பழி தின்றி, இறந்தவர் பிணத்தருகிருந்து அப்பந்தேறல் அருந்துவதால் அவர் பாவத்தை ஏற்பதாகக் கருதிக் கூலிக்கமர்த்தப்பட்டவர்.
Sin-eating
n. சபிண்டிச் சாப்பாடு.
Sinecure
n. உம்பளமானியப் பணி, ஆன்மிகப் பணியின்றி ஊதியமும் பெருமையும் தரும் திருக்கோயில் அலுவல், உம்பளப்பணி, (பெ.) உம்பளமாணியப்பணி வாய்ப்புடைய, உம்பளப் பணியளிக்கிற.
Sinecured
a. உம்பளப்பணி வாய்ப்பு அளிக்கப்பெற்ற.
Sinecurism
n. உம்பள மானியப்பணி நிலை, உம்பளப் பணிப்பேறு.
Sinecurist
n. உம்பள மானியப்பனி பெறுவோர்.
Sinew
n. தசைப்பற்று, தசைநார்களை எலும்புடன் இணைக்கும் இழைமம், தசைநாண், தசைப்பற்றின் இழை நரம்பு, தசை நாண் துணுக்கு, தசைப்பற்றுக் கூறு, (வினை.) தசை நாராய் அமை, இணைத்துப்பிடி, பற்றிப்பிணை, தாங்கு, ஆதாரவலிமையாயிரு.
Sinewed
a. தசைநாணுடைய, தசைப்பற்று வலிமையுடைய, தசைப்பற்றுச் செறிவுடைய.
Sinewiness
n. தசைப்பற்றுடைமை, தசைப்பற்றுச் செறிவுடைமை, செறிவலிமை, சலாகைத்திரட்சி, செறிந்து திரண்டு ஒடுங்கிய உடலுடைமை.
Sinewless
a. தசைப்பற்றற்ற, வலிவற்ற, வலிமையாதாரக் கூறுகள் வாய்க்கப்பெறாத.
Sinews
n. pl. தசைநார்கள், தசைநார்த்தொகுதி, தசை வலிமை, உடல்வலிமை, கம்பியுருட்சி நிலை, உடம்பின் ஒடுங்கிய செறிதிரட்சி நிலை, வன்தளைக்கட்டு, ஆதார வலிமை, ஆதார வன்மைவளக் கூறுகள்.
Sinewy
a. தசை நாண் போன்ற, தசைப்பற்றுக்குரிய, தசைப் பற்றுடைய, தசை நாண் திரட்சியுடைய, சலாகைத்திரட்சியுடைய, செறிவுருட்சியான, உடல் வகையில் திரண்டுருண்டொடுங்கிய, வலிமைமிக்க, திண்ணிய.
Sinfonia
n. புகுமுக ஒத்திசைவு.