English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Single-hearted
a. ஒரே நோக்கமுடைய, ஒருமுகப்பட்டட உணர்வுடைய, ஒரே பற்றுடைய.
Single-loader
n. வெடிக்கலம் செருகப்படவேண்டிய துப்பாக்கி.
Single-minded
a. ஒரே நோக்கமுடைய, ஒருமுகப்பட்ட உள்ளமுடைய, ஒருமுகச் சிந்தனை வாய்ந்த.
Single-mindedness
n. ஒருமுகச் சிந்தனை, ஒருமுக நோக்கம்த, ஒருமுகப்பட்ட மனப்பான்மை, எளிய உளப்பண்பு.
Singleness
n. ஒருமுகப்பட்ட தன்மை, தனிமை, ஒருமை, தனிமைத்தன்மை, புதுமை.
Single-stick
n. சிலம்பாட்ட ஒற்றைக் கோல்.
Singlet
n. மார்புச்சட்டை, சட்டைக்கு அடியில் அணியப்பெறும் கையில்லாத உட்சட்டை.
Singleton
n. சீட்டாட்டவகையில் ஒற்றை ஆட்டச்சீட்டு, ஒரே பொருள், ஒரே குழந்தை.
Singly
adv. தனியாக, தனி ஒருவனாக, தானாக, தாமாக, பிறர் துணையின்றி, ஒன்றொன்றாக, தனித்தனியாக, ஒவ்வொருவராக.
Singsong
n. இழுபறிச் சும்மை, சலிப்பூட்டும் சந்த இசைப்பு, மாறா ஒரே நிலை மெட்டு, அடுக்கொலிப் பாட்டு, இழுத்த பேச்சு, இசையிழுப்பு வாசிப்பு, முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு, பயிலாப் பாடற்குழு அரங்கம், சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம், (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த, மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட, இசையிழப்பாக வாசிக்கப்பட்ட, (வினை.) இழுத்திசை, இசையிழுப்பாக வாசி, இழுத்திசைத்துப் பேசு, இசையிழுப்பாக ஒப்பி.
Singular
n. (இலக்.) ஒருமை எண், ஒருமைச்சொல், ஒருவர், ஒன்று, (பெ.) ஒற்றையான, ஒருதனியான, ஒப்பிணைவற்ற, உவமையற்ற, தனித்தன்மை வாய்ந்த, தனிப்பட்ட, தலைசிறந்த, சராசரிக்கு மேற்பட்ட, பொது நீங்கிய சிறப்புடைய, அரிய, புதுமை வாய்ந்த, வியக்கத்தக்க, இயன் மாறுபாடான, மரபுக்கு மாறான, வழக்கில்லாத, அபூர்வமான, மிகப் பொருத்தமமான, (இலக்.) ஒருமை எண்ணுக்குரிய.
Singularity
n. தனித்தன்மை, தனி ஒருநிலை, அருநிலைப் பண்பு, அருநிகழ்வுநிலை, அருவாய் பிணைவு, அறியாப்புதுமை, விசித்திரம், வியக்கத்தக்க தன்மை, தனிச்சிறப்புக் கூறு, ஒப்பிணைவின்மை, ஒப்பிணைவற்ற செய்தி, வழக்கிலில்லா நிலை, இயன்மாறான செய்தி, முன்காணாப் பண்பு, புதுமை நிகழ்வு, ஒருமைத்தன்மை, ஒன்றனிலை.
Singularization
n. ஒருமையாக்கம், சிறப்பறிகுறியாக்கம்.
Singularize
v. ஒருமைவடிவம் ஆக்கு, பன்மையிலிருந்து போலி ஒருமை வடிவு உருவாக்கு, குறிப்பிடப்பட்டதாக்கு, தனிச்சிறப்பூட்டு, சிறப்பறிகுறியாக்கு.
Singularly
adv. தனிப்பட்ட முறையில், அருநிலையிணைவாக, வியக்கத்தகு முறையில்.
Sinister
a. (கட்.) கேடயத்தின் இடப்புறமாமன, வேடிக்கையாக இடமான, தீக்குறியான, கெடுநோக்குடைய, கெட்ட இயல்புடைய, கெட்ட, கொடிய.
Sinistral
a. சங்கு முதலியவற்றின் வகையில் மறிநிலைப்புரியான, இடம்புரியான.
Sinistrocerebral
a. மூளையின் இடபாற் பாதி சார்ந்த.
Sinistrorse
a. கொடிவகையில் இடஞ்சுழியான.
Sinistrous
a. குறும்பான, தவறான.