English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sinuous
a. பன்மடி வளைவுகளுடைய, பாம்புபோன்ற, திருக்குமறுக்கான, அலைபோல் வளைவுடைய, வளைந்து வளைந்து செல்லுகிற.
Sinus
n. (உள்., வில.) எலும்பு உட்புழை, பைக்குழிவு, (மரு.) புண்ணின் உட்புரை, (மரு.) பிளவை, குறுவாயுடைய புரையோடிய புண், (தாவ.) இலையோரப் பிரிவுகளிடைப்பட்ட உள்வளைவு.
Sinusitis
n. மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
Sioux
n. வட அமெரிக்க செவ்விந்திய பழங்குடிமரபுக் குழுவினர், (பெ.) வட அமெரிக்க செவ்விந்திய பழங்குடி மரபுக் குழுவினைச் சார்ந்த.
Sip
n. உறிஞ்சுதல், சிறுகச், சிறுக உறிஞ்சிக் குடித்தல், ஒருதடவை உறிஞ்சுதல், ஒருதடவை உறிஞ்சளவு, சிறுவாயளவு நீர்மம், (வினை.) உறிஞ்சு, உறிஞ்சு உறிஞ்சிக்குடி, வாய் வைத்து உறிஞ்சி மாந்து, சிறுகச் சிறுகக் குடி.
Sipahee
n. சிப்பாய், படைவீரன்.
Siphon
n. தூம்புகுழாய், கவான் குழாய், மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய், உந்துகுதப்பி, கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில், சிப்பிகளின் உறிஞ்சுக்குழல், தூம்புக் கால்வாய், (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல், கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.
Siphonage
n. கவான் குழாய் வழி இயக்கம், கவான் குழாய்ப்பயன்பாடு.
Siphonal
a. கவான்குழாய்க்குரிய, கவான்குழாய் சார்ந்த, கவான்குழாய்வழி இயக்கம் போன்ற, கவான்குழாய் போன்ற.
Siphon-bottle
n. உந்துகுப்பி, கவிகைத்தாழ்குழல்வழி, நீருகைக்கும் வளிச் செறிவூட்டிய நீர்ப்புட்டில்.
Siphon-cup
n. உந்துதிரி மசகுக்லம், நுண்புழைச் செயலாற்றலால் வேண்டிய பகுதிக்குத் திரிமூலம் மசகுநெய் கொண்டுய்க்கம் அமைவு.
Siphonet
n. தேங்கசிவிழை, தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
Siphon-gauge
n. நீர்த்தேக்க அழுத்தமானி, பாதரசமடங்கிய கவான்குழாய் மூலம் நீர்த்தேக்க அழுத்தம் காட்டும் அமைவு.
Siphonic
a. கவான்குழாய் போன்ற, கவான்குழாய்க்குரிய, கவான்குழாய்வழி இயக்கம் உடைய, கவான்குழாயின் பயன்பாடுடைய.
Siphonogamy
n. பூவிழைப் பொலிமானம்.
Siphuncle
n. சிப்பிவகைகளின் உறிஞ்சுகுழல், பூச்சிவகைகளின் உறிஞ்சிழைத் தூம்பு, தேங்கசிவிழை, தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
Sippet
n. உண் கவளம், அப்பத்துண்டு.
Sir
n. தகவாளன், வீரத்திருத்தகை அடைமொழி, தகவாளர் விளிக்குறிப்புச்சொல், ஐயாஸ் ஐயாஸ் (வினை.) தகவாளர் என்ற அடையுடன் குறிப்பிடு, ஐஸ் என்று விளித்தழை.
Sircar
n. அரசியலார், சர்க்கார், ஆட்சித்தலைவர், மனை மேற்பார்வையாளர், நாட்டாண்மைக் கணக்கர்.
Sirdar
n. ஆணைத்தலைவர், தளபதி.