English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sistrum
n. பண்டைய எகிப்திய சமயத்துறைக் கிலுகிலுப்பொலிக் கருவி.
Sisyphean
a. கிரேக்க பழங்கதை மரபிற்குரிய சிசிபஸ் போன்ற, ஓய்வொழிவற்ற கடுவீண் உழைப்பிற்கு ஆட்பட்ட.
Sit
v. அமர், உட்காரு, பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு, விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு, கோழி-பறவை வகையில் அடைகாத்திரு, குதிரையின் மீது இவர்ந்திரு, உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு, தவிசில் இருந்தாட்சி செய், பதவியில் வீற்றிரு, தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு, தேர்வில் அமர்ந்தெழுது, தேர்வில் வேட்பாளராயிரு, இயங்காதிரு, உணவு வகையில் செரியாத நிலையிலிரு, பொருந்தியிரு, இரு, அமைவுறு, மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு, கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
Sit-down
n. வேலை செய்யாதமர்ந்திருக்கை, (பெ.) வேலை செய்யாதமர்ந்திருக்குங் கட்டுப்பாடுடைய.
Site
n. குறியிடம், வரைநிலையிடம், புரையிடம், எல்லை வரையறைப்பட்ட இடம், இடவெல்லை, மனையிட எல்லை, மனைக்காக விடப்பட்ட இடம், கட்டிடத்திற்கான இடம், நிவேசனம், நகருக்காக ஒவக்கி விடப்பட்ட இடம், (வினை.) சரியான இடங்குறி, குறியிடத்தமை.
Sitfast
n. சேணக்கரடு, குதிரைமுதுகில் சேண உராய்வழுத்தத்தால் ஏற்படும் காழ்ப்புக்கட்டி.
Sitology
n. உணவுமுறை நுல்.
Sitophobia
n. உணவு வெறுப்புக்கோளாறு.
Sitter
n. உட்கார்ந்திருப்பவர், அமர்ந்திருப்பவர், முன்னிலைகாட்சிமாதிரி, ஓவியத்திற்கு மாதிரியாக உட்காருபவர், ஓவியத்திற்கு உட்காருபவர், அடைகாப்புக்கோழிம, அமர்கையிலே இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை, எளிதாக இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை.
Sitter-in
n. குழந்தைப் பராமரிப்பாளர், பெற்றோரில்லாத நேரத்திற் குழந்தைகளை உடனிருந்து பாதுகாக்கும் பொறுப்பு ஏற்றவர்.
Sitting
n. உட்கார்ந்திருத்தல், குந்துகை, அமர்வு, அமர்வு நேரம், மன்ற அமர்விருக்கை, மன்ற அமர்விருக்கைக் காலம், அடைகாப்பு, முட்டை ஓரீடு, ஒருதடவை அடைகாக்கப்பட்ட முட்டைத்தொகுதி, திருக்கோயிலில் ஒதுக்கிவைக்கப்பட்ட அமர்விடம், (பெ.) உட்கார்ந்திருக்கிற, அமர்ந்திருக்கிற, அடைகாக்கிற, அமர்விருக்கை கொண்டிருக்கிற, கூடியுள்ள.
Sitting-room
n. அமர்வுக்கூடம், இளைப்பாறுதற்கான அறை, போதிய இட அகலம்.
Situate
-2 v. இடவரைவுறுத்து, இடங்குறித்தமை, எல்லைப் படுத்தியமை, சூழமைவுறுத்து.
Situated
a. இடவரையுற்ற, இடவமைவுற்ற, எல்லையமைவுற்ற, சூழமைவுற்ற, சூழ்நிலையிலுள்ள, சூழமைப்புடைய.
Situation
n. இடவெல்லை அமைதி, சூழிட அமைதி, சுற்றுச் சார்பு நிலை, சூழமைதி, சூழமைவு, நிலைமை, வாய்ப்புவளநிலை, அமர்வுநிலை, படிநிலை, பதவி, தொழில்நிலை, பதவிப்படிநிலை, நெருக்கடிநிலை, நெருக்கடிக்கட்டம்.
Sitz-bath
n. விலாக்குளியல்.
Siva
n. சிவன், சிவபெருமான்.
Six
n. ஆறு, ஆறு என்ற எண், ஆறு பொருள்கள், அறுவா, ஆறு எண்கொண்ட சீட்டு, ஆறுபுள்ளிகள் கொண்ட பகடைக் காய், (பெ.) ஆறான, ஆறு எண்கொண்ட.
Sixain
n. ஆறு அடிச் செய்யுள்.
Sixer
n. மரப்பந்தாட்டத்தில் ஆறு கெலிப்பெண் வரத்தக்க பந்தடி.