English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sized
-2 a. பசையூட்டப்பெற்ற.
Sizer
-1 n. அளவெடுப்பவர், அளவெடுப்புக்கருவி, (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிதான அளவுடைய பொருள்.
Sizestick
n. சக்கிலியின் கால் அளவெடுப்புக்கோல்.
Sizing
-1 n. வகைப்படுத்துதல், வகைமாதிரிப்படுத்துதல்.
Sizing
-2 n. பல்கலைக்கழக வெண்ணெய் அரங்கத்திலிருந்து கட்டளை மிகையளவு கோருதல்.
Sizy
a. பசையார்ந்த, பிசுபிசுப்பான.
Sizzle
n. சுரசுரப்பொலி, தாளிப்பொலி, (வினை.) சுமரசுரப்பொலி செய், வறுப்பொலி செய்.
Sjambok
n. காண்டை வார்க்கசை, காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு, (வினை.) காண்டை வார்க்கசையால் அடி.
Skald
n. பாணன், ஸ்காண்டினேவிய வீரகாதைக் கவிஞன்.
Skat
n. செர்மனியில் மூவராடும் சீட்டாட்ட வகை.
Skate
-1 n. சாய்சதுரவடிவுடைய பெரிய கதிர்க்கைக் கடல்மீன் வகை.
Skate
-2 n. பனிச் சறுக்குப் புதைமிதி, கடுந்தள வழுக்கு நடைக்கட்டை, (வினை.) பனிமீது சறுக்கிச் செல், கடுந்தரையில் வழுக்கிச் செல், அடிக்கோலம் அமையும்படி சறுக்கிச் செல், சறுக்கிச் சென்று குறிப்பிட்ட உருவம் வரைவி.
Skating-rink
n. செயற்கைச் சறுக்கு பனிப் பரப்பு, செயற்கை வழுக்கு தளம்.
Skean
n. பண்டைக் கெல்டிக் இனத்தாரின் குத்துவாள்.
Skean-dhu
n. பண்டைக் கெல்டிக் இனத்தாரின் முழந்தாள் செருகு உடைவாள்.
Skedaddle
n. (பே-வ) விரைவோட்டம், உடனடிக்கலைவு, (வினை.) விரைவாக ஓடிப்போ, ஓடிச்சிதறு.
Skein
n. நுற்கண்டு, பட்டிழைக் குழைச்சு, பறக்கும் காட்டு வாத்துக்குழு, சிக்கு முடிச்சு, குழப்பம்.
Skeletal
a. எலும்புக்கூடு சார்ந்த, எலும்புக்கூட்டின் இயல்பு வாய்ந்த, எலும்புச்சட்டத்துக்குரிய.
Skeletogenous
a. எலும்புக்கூட்டை உருவாக்குகிற, எலும்புக்கூடாக உருவாகிற, எலும்புக்கூடாக உருவாகத்தக்க.
Skeletography
n. எலும்புக்கூட்டின் நுல்முறை வழாக்கண்டாய்வு விரிவுரை.