English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Skier
n. பனி நடைக் கட்டையைப் பயன்படுத்துபவர்.
Skies
n. pl. வானிடம், வான்முகடு.
Skiff
n. வள்ளம், மெல்லுகைப்புடைய பரிசல்.
Skiffle
n. பல்லிய இசைவகை.
Skiing
n. பனி நடைக் கட்டையிட்டு நடத்தல்.
Ski-joring
n. பரிமா இழுவையாட்டம், பனி நடைக்கட்டை மீது குதிரையால் இழுக்கப்பட்டு ஆடும் விளையாட்டுவகை.
Skilful
a. தேர்ச்சித்திறம் வாய்ந்த, பயில்திறமையுள்ள, நயத்திறம் காட்டுகின்ற, அருநயத்திறம் வாய்ந்த, கைத்திறமிக்க, தனியாற்றல் படைத்த, செயல்திறனார்ந்த.
Skill
n. தேர்ச்சித்திறம், பயில்திறம், செயற்றிறம், பயிற்சி பெற்ற திறமை, கைத்திறம், தனித்திறனாற்றல், இன்திறம், நுண்நயத்திறம், சாமர்த்தியம், சூழ்ச்சித்திறம்.
Skilled
a. திறமை கொண்ட, தனித்திறம் காட்டுகின்ற, செயற்றிறானார்ந்த, திறமை காட்டுகின்ற, தேர்ச்சித்திறமைக்குரிய.
Skillet
n. உலோகக் குடுவை, நீண்டபிடியும் கால்களும் கொண்ட சிறு சமையற்கலம்.
Skill-less
a. தனித்திறமையற்ற, திறமையில்லாத, எதுவும் தெரியாத.
Skills
v. (அரு.) பயனுடையதாயிருக்கிறது.
Skim
v. ஏடெடு, நீர்மத்தில் மேலீடாக ஆடை எடு, மேலீடாகச் சீவி எடு, மேவிச்செல், மேலீடாகச் செல், தடவிச்செல், அடிதொட்டுச்செல், நழுவிச் செல், தவழ்ந்து செல், மிதந்து செல், காற்றில் மெல்லப் பரவிச் செல், மேலோட்டமாகப் படி, மேற்பரப்பில் இயங்கு, ஆழ் ஈடுபாடின்றிச் செயலாற்று, மேலீடாகப் பார், சிறந்த கூறுகளை மட்டும் கவனித்தெடு.
Skimmer
n. ஏடு எடுப்பவர், ஆடை பிரித்தெடுப்பவர், ஏடு எடுக்கும் கரண்டி, மெல்விசைப்படகு, நீர்தத்திப்புள், நீர்வாழ் பறவை வகை, மிதந்து செல்பவர், தவழ்ந்து செல்பவர், மேலீடாகச் செயலாற்றுபவர், மேலோட்டமாக வாசிப்பவர், முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர்.
Skim-milk
n. ஏடு எடுத்த பால்.
Skimming-dish
n. (இழி.) தட்டை அடிப்பகுதியினையுடைய பந்தய விசைப்படகு, விரை மெல்விசைப்படகு.
Skimp
v. படி அள, அளந்து கொடு, இவறு, கருமித்தனஞ் செய்.
Skimpingly
adv. கருமித்தனமாக.
Skimpy
a. கருமித்தனமார்ந்த.
Skin
n. மெல்லியல் தோல், தொலி, தோலின் ஓர் உரி, மனித உடலின் தோல், சிறுவிலங்குத் தோல், தோலடை, தோலின் ஓர் அடுக்கு, உயிரிகளின் மேற்புரை, பச்சைத்தோல், மயிருடன் உரிவை, பதத்தோல், மயிர் நீங்கிய உரிவை, தோற்சரக்கு, தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள், தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை, ஊறுபடாநிலை, மெய்ப்பு முழுமை, காய்கனிப்புறத்தொலி, மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், தாவரப் புற உரி, புறப்பட்டை, கப்பல் புறத்தகடு, மென்றாள், இடை இகழ்ச்சவ்வு, பட்டை உரி, (வினை.) தொலி, தோலை உரி, தொலி போக்கு, மேல்தோல் விலகுவி, தோலை விடர்த்து, புண்மீது புதுத்தொலி மூடு, புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு, மென்தோலால் மூடு, மென்தோலில் பொதி, (பே-வ) ஆடை உரிந்துவிடு, துகிலுரி, மற்றொருவரின் புற உடை நீக்கு, மேலுடை அகற்றிவிடு, (இழி.) பணம்பறி, உடைமை பறி, ஏய்த்துப்பறி.