English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Skipper
-2 n. கப்பல் மீகாமன், வாணிகச் சிறுகலத் தலைவன், வானுர்தி வலவர், ஆட்டக்குழுத் தலைவர்.
Skippet
n. ஆவணக்கூடு, முத்திரைப்பத்திரங்களைக் காத்துப் பேணி வைக்கும் உருட்சி மரப்பெட்டி.
Skipping
n. குதியாட்டம், (பெ.) குதியாட்டமிடுகிற, தவ்வுகிற, அடிக்கடி மாறுகிற, தலைதிரிந்த, தறுதலையான.
Skipping-jack
n. தத்துக்கட்டை, குழந்தை விளையாட்டுப் பொருள், தத்துக்கிளி, விட்டில் வகை, மீன்வகை.
Skippingly
adv. தாவுநடையுடன், துள்ளிக்குதித்து, மகிழ்வுடன் குதித்தாடு நிலையில்.
Skipping-rope
n. தவ்வாட்டக் கயிறு, சிறுவர் சிறுமியர்தாவு விளையாட்டுக்கயிறு.
Skirl
n. கிறீச்சொலி, பைக்குழல் இசைக்கருவி ஒலி, (வினை.) பைக்குழல் இசைக்கருவிபோல் கிறீச்சிடு.
Skirmish
n. சில்லறைச்சண்டை, இடைவரவான சிறு கைகலப்பு, எல்லைப்பூசல், சிறுகலகம், சிறுதிறப் போராட்டம், வாய்ச்சண்டை, சிறு வாக்குவாதம், (வினை.) சில்லறைச் சண்டையிடு, சிறு பிரிவுகட்கு இடையே போரிடு, ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு, முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு, சிறுபோரிடு, சில்லறை வாக்குவாதஞ் செய்.
Skirmisher
n. பூசலாளர், சச்சரவிடுபவர், சிறுபோர் விளைவிப்பவர், சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர், ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர்.
Skirret
n. நீர்வாழ் காய்கறிப் பூண்டுவகை.
Skirt
n. அங்கித் தொங்கல், சட்டைக் கீழ்விளிம்பு, பெண்டிர் அரைப்பாவாடை, ஓரம், விளிம்பு, எல்லை, மதிப்புக்குறைவான புறப்பகுதி, (இழி.) பெண்டு, பெண், (வினை.) ஓரமாகச் செல், விளிம்பினைச் சுற்றிச்செல், ஓரம் கடந்துசெல், அருகாகச் செல், அருகில் அமைந்திரு, ஓரமாக அமைந்திரு.
Skirt-dancer
n. பாவாட்டம் ஆடுபவர், ஆடை காற்றில் பரவி அழகுத்தோற்றம் தருமாறு ஆடும் ஆடலோர்.
Skirt-dancing
n. பாவாட்டம், ஆடை காற்றில் தவழ்ந்தபாடி அழகுதருமாறு ஆடும் ஆட்டம்.
Skirted
a. பாவாடை அணிந்த, தொங்கலையுடைய, ஓரமாகக் கொண்ட, ஓரமாகச் சூழப்பட்ட, சுற்றுவிளிம்பாக உடைய, அருகே உடைய.
Skirting
n. ஓரம், எல்லை, தொலையோரப் பகுதி, பாவாடைத் துணி, அங்கித் தொங்கல் துணி, அகச்சுவரோரப்பட்டி, ஆடைவிளிம்பு, ஓரம், அருகு, கிணற்றுத் தோவளப்பாவு தளம்.
Skirtings
n. pl. மாட்டிறைச்சியின் மலிவான பகுதிகள், தரங்குறைந்த பகுதி ஆட்டுமயிர்.
Skirtless
a. தொங்கலற்ற, பாவாடையற்ற.
Skirts
n. pl. தொலையோரப்பகுதிகள், முனைக்கோடிப்ப பகுதிகள், எல்லைப்புறங்கள், அக எல்லைகள், புற எல்லைகள்.
Skit
-1 n. சிறு வசைத்துணுக்கு, சிறு நையாண்டி அங்கதம், சிறு கேலிக்கட்டுரை, வசை வெடிப்புரை, சிறுதுணுக்கு.
Skit
-2 n. (பே-வ) குவை, குழு, கூட்டு, தொகுதி.