English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Skin-bound
a. கட்டிறுக்கமான, சதையின் மேல்தோலை இறுக்க இழுத்துப் போர்த்தப்பெற்ற.
Skin-deep
a. மேற்போக்கான, நுனிப்புல்லார்ந்த, மேலீடான, ஆழமற்ற, திட்பமற்ற, ஆழ் உணவ்ர்ச்சியற்ற, உட்செறிவற்ற, நீடித்து நிலைக்கமுடியாத.
Skin-effect
n. புறம்பரபு விசை, ஒற்றைமாற்று மின்வலி வகையில் மின்கடத்தியின் புறநிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை.
Skinflint
n. கருமி, கஞ்சன்.
Skin-friction
n. கப்பல் வகையில் பக்கநீர் உராய்வுத்திறம்.
Skinful
n. நீர்மவகையில் தோற்குடுவை அளவு.
Skin-game
n. உருட்டுப்புரட்டு, ஏய்த்துப்பறிப்பு.
Skin-grafting
n. உயிர்த்தோல் ஒட்டுமருத்துவம்.
Skink
n. குறுங்காற் பல்லி வகை.
Skinless
a. தோலற்ற, புறத்தோல் மிகுதியில்லாத, உணர்ச்சி குன்றிய.
Skinned
a. புதுத்தோல் பொதியப்பெற்ற, தோலுரிக்கப்பட்ட.
Skinner
n. தோல் உரிப்பவர், தோல் பொதிபவர், தோல் பதனிடுபவர், தோல் வணிகர்.
Skinniness
n. எலும்புந் தோலுமாய் இருத்தல்.
Skinny
a. எலும்புந் தோலுமான.
Skip
-1 n. குதி, துள்ளல், குதியாட்டம், துள்ளநடை, விரைந்து மெல்லடியிட்டு நடத்தல், (வினை.) குதி துள்ளு, ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி, குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு, தவ்வாட்டமாடு, சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு, துள்ளிநட, வி
Skip
-2 n. கல்லுரி ஏவலாளன், டப்ளின் கல்லுரி வழக்கில் கல்லுரிச் சாரணர்.
Skip
-3 n. முடப்பந்தாட்டத் தலைவர், பனிக்கற் சறுக்காட்டத்தில் இயக்குநர்.
Skip
-4 n. சுரங்கவகையில் ஆட்கள் ஏற்ற இறக்கக் கூண்டு, பொருள் ஏற்ற இறக்கக்கூடை.
Skipjack
n. குதிக்கும் பொம்மை, மீன்வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தத்தும் விட்டில்வகை.
Skipper
-1 n. குதிப்பவர், தாவி நடப்பவர், குதியாட்டமிடுபவர், குதிப்பது, தாவிச்செல்வது, தாவுகயிறாட்டம் ஆடும் சிறுவன், தாவுகயிறாட்டம் ஆடும் சிறுமி, மீன்வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தத்தும்விட்டில் வகை.