English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Skeletology
n. எலும்புக்கூட்டாய்வு நுல்.
Skeleton
n. கங்காளம், எலும்புக்கூடு, இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம், எலும்பமைச் சட்டம், தாவரங்களின் உள்வரிச்சட்டம், அமைப்புச்சட்டம், ஆதாரச்சட்டம், படங்களின் புறவரிச்சட்டம், உருவரைக் கோடு, எச்சமிச்சம், அழிவின் எஞ்சியபகுதி, தேய்வுற்ற பகுதி, முக்கியகூறு, ஆக்கவரிச்சட்டம், இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு, சிறந்தகூறு, திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு, (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர், எலும்புந்தோலும் ஆனவர், (அச்சு) மேல்வரி அச்சுரு, (பெ.) நிலைவரிச்சட்டமான, உருவரைச்சட்டமான, மூல அமைப்பான, எலும்புந் தோலுமான, ஒட்டி மெலிந்த.
Skeleton-face
a. மெல்லிய கீற்றுக்களாலான.
Skeletonize
v. எலும்புக்கூடாக்கும், சதைப்பகுதியை நீக்கிவெறும் எலும்பாக்கு, இலைகளின் நரம்பிடை இழைமப் பகுதியை நீக்கு, நுணுக்க விவரங்களை நீக்கிவிட்டு முக்கிய கூறுகளை மட்டும் காட்டு.
Skelp
n. வீச்சொலி, பளாரென்ற அறை வீச்சொலி, (வினை.) அறைகொடு, பளாரென்று கொடு, அடி, விரைந்து செல்.
Skep
n. மரவரிக்கூடை, பிரப்பங்கூடை, வைக்கோல் அல்லது பிரம்பாலான தேன்கூடு.
Sketch
n. திட்ட உருவரை, முதல்நிலை மாதிரி, நிரம்பாப் படிவம், வௌளோட்ட வரைப்படி, தேர்வியல் ஓவியம், முதனிலை குறிப்பு, கருப்பொருள் தொகுதி, சுருக்கமாதிரி, நினைவுவரிக் குறிப்பு, கருத்தோட்டப் பதிவு, துண்டுத்துணுக்குத்தொடர், நிரம்பா எண்ணக்குவை, மேலோட்டவருணனை, நினைவோட்டக் கட்டுரை, தனிப்பாட்டு வரி, மேல்வரி நாடகக் காட்சி, (வினை.) மாதிரிப்படம் வரை, உருவரை தீட்டு, நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு, ஏகதேசமாகத் தீட்டு, விட்டுவிட்டு வரை, பெரும்படி வடிவாக எழுது, முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு, கருப்பொருள் விரித்துரை, கருத்தோட்டம் பதிவு செய், மேலோட்டமாக வருணித்துச் செல், குறிப்பாக எடுத்துரை, சுருக்கமாக எடுத்தெழுது.
Sketch-block, sketch-book
n. வரைதாள் தொகுப்பேடு.
Sketch-map
n. புனையா வரை படம்.
Sketchy
a. திருத்தமுறாத, நுணுக்கவிளக்கங்களற்ற, விரையோட்டக் குறிப்பான, முழுமையுறாத, மட்டான, குறைவான.
Skew
n. சாய்வு, சரிவு, கோட்டம், ஒருக்கணித்த பார்வை, சாய்தளப்பரப்பு, மதிலணைப்பின் சாய்முகடு, முக்கோணமதிலின் சாய்முகடு, முக்கோண மதிலைத் தாங்கும் வரிக்கற் பட்டிகை, (பெ.) சாய்வான, சரிந்த, (கண.) நுட்பச் செவ்விசைவுத் திரிபுடைய, பக்கவாட்டான, சிறக்கணிப்பான, ஒருபாற்சாய்வான, கோணலான, (வினை.) சிறக்கணி, ஒருக்கணிப்பாக்கு, சாய்வாக்கு, புடைச்சரிவாக்கு, (வினையடை.) கோணலாக.
Skewbald
a. கலவைநிறப் பட்டைகளையுடைய, திட்டுத் திடலாகப் பன்னிறக் கலவையான, குதிரை வகையில் வெண்ணிறப் பட்டைகள் வாய்ந்த.
Skewer
n. பற்றுகரண்டி, பக்குவப்படுத்தப்படும் இறைச்சியைப் பற்றிய பிடிக்கும் கௌவுகோல்.
Skew-eyed
a. ஓரக்கண் பார்வையுடைய, சாய்விழியுடைய.
Skewwhiff
adv. (பே-வ) சிறக்கணித்து நோக்கியவாறு, ஓரப்பார்வையாக.
Ski
n. பனி நடைக் கட்டை, பனியிற் சறுக்கிச் செல்ல உதவும் நெடுநீள் கட்டை, (வினை.) பனி நடைக் கட்டையிட்டு நட.
Skid
-2 v. 'ஸ்கை' என்பதன் இறந்த கால முடிவெச்ச வடிவம்.
Skid,
-1 n. அண்டைக்கட்டு, ஆதாரத் தடைக்கட்டை, தடை, ஆப்பு, சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு, தென்னுகட்டை, சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை, சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு, விசைத்தடுக்கு, இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக
Skid-fan
n. சக்கரச் சுழற்சித் தடைகாப்பு.