Sink
n. சாக்கடைப்புதைகுழி, அங்கணம், அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, கழிகடை, கழிவுப்பொருள்களின் தேங்கிடம், வறற் குட்டை, ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை, சேற்றுத்தலை, வடிகால் வசதியற்ற தேங்கிடம், தளமையப் பள்ளம், தொடுகுழி, ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம், நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில், (மண்.) பாதாளக்குழி, சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை, (வினை.) ஆழ்வுறு, தாழ், அமிழ்வுறு, மூழ்குறு, மூழ்கி மறைவுறு, புதைவுறு, புதையுண்டுமறைவுறு, கதிரவன் வகையில் அடைவுறு, ஆழ்த்து, அமிழ்த்து, மூழ்குவி, தாழ்த்து, தணிவி, குனிவி, தரங்குறைவி, அடக்கு, புதை, புதைத்துமறை, தோன்றாதடக்கி வை, மறைத்து ஒதுக்கிவை, ஔதத்துவை, சூதாக மறைத்துவை, கூறாதுவிடு, ஒன்றி இழைவித்துவிடு, கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு, மெல்ல வீழ்வுறு, இற்றுவிடு, நொறுதங்கிஅமைவுறு, அமுங்கி இருந்துவிடு, இழி, படிப்படியாக இறங்கு, இறக்கப்பெறு, இறக்கமுறு, கீழ்நோக்கு, கீழ்நோக்கிச் சாய், பள்ளமாகச் சரிவுறு, பள்ளம் விழப்பெறு, உட்குழிவுறு, தளத்தில் அமிழ்வுறு, தணிவுறு, குறைவுறு, குனிவுறு, அமிழ்ந்தமைவுறு, அடியில் படிவுறு, உள்ளுறிச் செல், உறிஞ்சப்பெறு, உள்வாங்கிக் கொள், நுனிதோய்வுறு, நன்கு பதிவுறு, உளம்படிவுறு, படிதாழ்வுறு, மதிப்பிழ, படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல், மெல்ல மறைந்துவிடு, படிப்படியாகப் புலப்படாமமற் போ, தோண்டு, மேற்படிவி, சார்த்து, ஊடுருவித்துளை, ஆழ்ந்து உட்செல், நுழைவி, புகுத்து, நுழை, புகு, ஒழித்துவிடு, அழி, நிறுத்து, நீக்கு, கைவிடு, துறந்துவிடு, களைந்துவிடு, அழிவுறு, நாசமாய்ப்போ, செதுக்கு, வந்து அமைவுறு, அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய், தகாத முதலீடு செய்து இழ.