English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sleeve-valve
n. இழையுருளைத் தடுக்கிதழ்.
Sleigh-bell
n. சறுக்குவண்டிக்குதிரைச் சேணச்சிறு மணி.
Sleight
n. கைத்திறன், கைப்பழக்கம், அருந்திறன், செயற்சதுரப்பாடு.
Sleight-of-hand
n. கைத்திறமுறை, செப்பிடுவித்தை, கைச்சாலவித்தை, வாட்போரின் கைவீச்சுத்திறம், கைவீச்சு நயம்.
Slender
a. ஓடுங்கிய, அகலங் குறைந்த, பருமனில் குறைந்த, கம்பிபோன்ற, ஒல்லியான, நுடங்கிய, நொய்ய, மிகச்சிறிய, நுண்ணிய, குறைவாயுள்ள, போதாத, சாரமற்ற, வளமற்ற.
Slenderness
n. மென்மை, நுண்மை.
Slept
v. 'சிலிப்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Sleuth-hound
n. மோப்ப வேட்டைநாய் வகை, துப்பறிபவர் தடங்காண் வல்லுநர், புலனறி வல்லுநர்.
Slew
-1 n. உடன் திருப்பம், விசைத்திருப்பீடு, திடீர்த்திருவெட்டு, விசை ஊசலாட்டம், உடன்விலங்கல், திடீர்ப்புடைபெயர்விடம், (வினை.) ஊடச்சின்மேல் திடுமெனத் திரும்பு,சுழன்று திரும்பு, திடுமெனப் புடைபெயர்.
Slew
-2 v. 'சிலே' என்பதன் இறந்தகாலம்.
Slice
n. துண்டம், பூழி, கூறு, பங்கு, பகுதி, வரிவரியாக நறுக்கிய துணுக்கு, மெல்லிய கண்டம், இறைச்சிச்சீவல், அப்ப அரிகண்டம், வகுத்தளிக்கப்பட்ட கூறு, கிட்டியபகுதி, சுரண்டுகத்தி, ஓலை அலகுடைச் சுரண்டு கருவி, மெல்லுணவுக்கரண்டி, சுரண்டுகோல், உலைக்களத் துப்புரவுக் கரண்டி, உலைக்களைப் பற்று குறடு, தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி, (வினை.) துண்டுதுண்டாக நறுக்கு, பூழிபூழியாக அரி, அரிந்து கூறாக்கு, படலம் படலமாகச் சீவு, துண்டி, அரிவது போன்று துடுப்பியக்கி உகை, குழிப்பந்தாட்ட மட்டையினை வெட்டுப்பாணியில் இயக்கு, பந்தினை வெட்டுவாக்காக அடித்து வலப்புற ஆட்க்காரரிடம் அனுப்பு.
Slice-bar
n. சுரண்டுகோல், உலைக்களத் துப்புரவுக்கரண்டி.
Slick
a. கைத்திறமிக்க, தரங்கெடாத, செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத, திறம்பட்ட, அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட, (வினை.) மழமழப்பாக்கு, மெருகுத்தோற்றங் கொடு, சீர்நயப்படுத்து, (வினையடை.) நேடியாக, முழுதுறழ்வாக, சரிநுட்பமாக.
Slicker
n. நீர்க்காப்பு மேற்சட்டை, மெருகுகருவி, மோசக்காரர், மோசஞ் செய்யக்கூடியஹ்ர்.
Slid
v. 'சிலைட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Slidable
a. நெகிழ்த்தித் தள்ளத்தக்க, இழைவுடைய.
Slide
n. சறுக்கல், இழைவியக்கம், பனிச்சறுக்கிழைவு, பனித்தளச் சறுக்கிழைவுத்தடம், பனிச்சறுக்கிழைவுத்தளம், பனிச்சறுக்காட்டத்தளம், வரியிழைவு, ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை, சாய்விழைவுத்தளம், சாய்சறுக்குத்தளம், இயந்திர இழைப்பகுதி, இழைவுறுப்பு, இழைகதவம், செருகிழைவு, உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள், இழைவூக்கு, தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி, ஆய்வாடிகளின் காட்சிவில்லை, (வினை.) நழுவிச்செல், வழுக்கியோடு, நழுவிச்செல்லுவி, இழைந்துசெல், பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல், சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல், சறுக்காட்டமிடு, தங்குதடையின்றி எளிதிற் செல், தன்னுணர்ச்சியின்றிச் செல், நழுவிநகர்வுறு, மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Slide-caliper
n. நுண்விட்டமானி, நழுவு நுண்படிக்கலமுடைய விட்டமளக்கும் கருவி.
Slider
n. பனிச்சறுக்கிச் செல்பவர், வழுக்கிச் செல்பவர், சறுக்கிச் செல்வது, இழைந்தோடும் உறுப்பு, தாள்வில்லைகளுக்கிடையிலுள்ள குளிர்பாலேடு, சேதாமை, சிவந்த வயிறுடைய ஆமை வகை.
Slide-valve
n. இழைவடைப்பு.