English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Smyrniot, Smyrniote
துருக்கிநாட்டில் ஸ்மிர்னா நகரில் வாழ்பவர், (பெ.) ஸ்மிர்னா சார்ந்த.
Snack
n. சிற்றிடையுணவு, விரைசிற்றுணா.
Snacks
நொறுக்குத் தீனி, நொறுவை
Snaffle
n. வாய்வடம், குதிரைக் கடிவாளத்தின் ஒற்றைவாய்ப்பொருத்து கம்பி.
Snaffle-bit
n. குதிரைக் கடிவாளத்தில் நெருக்குவடியற்ற வாய்வடம்.
Snaffle-rein
n. குதிரைக்கடிவாளத்தின் வாய்வடக்கயிறு.
Snag
n. முளை, குற்றி, முறிமுளை முகடு, கோறைப்பல், பல்லின் கோறைமுகடு, முறிந்த அடிமரக்கட்டை, நீரடிமுட்டுக்கட்டை, கலங்களின் நெறி தடுக்கும் ஆறு-கடல்களின் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு, எதிர்பாராத் தடங்கல், மறைமுக முட்டுக்கட்டை, (வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு, முட்டிவடுப்படு, முட்டிக்கீறலுறு, நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள், தடுத்துநிறுத்து, எதிர்பாராத் தடங்கலிடு, ஒழுங்கறத் தறி, ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று, கட்டுத்தறியின் முனைமுகடழி, முனை ஒழுங்குபடுத்து.
Snail
n. நந்து, நத்தை, உணவாகப் பயன்படும் நந்தூன், தோட்ட நத்தை, தோட்டச் செடிகளை அழிக்கும் சிற்றுயிர் வகை, இலையட்டை, இலைவடிவ நத்தை, மந்தமானவர், சுறுசுறுப்பற்றவர், மெல்ல நகரும் விலங்கு, நந்தாழி, மணிப்பொறியில் மணியடிப்பினை ஒழுங்குசெய்யும் நந்துவடிவப்பல்வட்டமைவு, சுருள்வடிவ நெற்றுவகை, சுருள்வடிவ நெற்றினையுடைய பயிற்றினம், (வினை.) தோட்ட நத்தையை அழி, தோட்ட நத்தை வேட்டையாடு, நத்தை வேகத்தில் செல்.
Snail-clover
n. திருகுநெற்றுக்களையுடைய பயிற்றினச் செடிவகை.
Snailery
n. நத்தைப்பண்ணை, உணவிற்கான நத்தைகள் வளர்க்குமிடம்.
Snail-fish
n. அகடொட்டுமீன், ஒட்டிக்கொள்வதற்கான வயிற்றுப்புற உறிஞ்சு கருவியுடைய மீன்வகை.
Snail-slow
a. நத்தை போன்று நகர்கிற, மிகளம் மந்தமான.
Snail-wheel
n. நந்தாழி, மணிப்பொறியில் மணியடிப்பை ஒழுங்குபடுத்தும் நத்தை வடிவப் பல்வெட்டுச்சக்கரம்.
Snake
n. பாம்பு, பாம்புபோன்ற பல்லி வகை, நன்றிகெட்டவர், நம்பிக்கைக் கேடு விளைப்பவர், உணர்ச்சியற்ற மனிதர், (வினை.) பாம்புபோல் இயங்கு, நௌதந்து நௌதந்து செல்.
Snake-bird
n. நீண்ட கழுத்துள்ள மீனுண்ணும் பறவை வகை.
Snake-bite
n. பாம்பு கடி.
Snake-charmer
n. பிடாரன், பாம்பாட்டி.
Snake-charming
n. பாம்பாட்டி வித்தை.
Snake-cult
n. பாம்பு வணக்கம்.
Snake-dance
n. பாம்பு நடனம்.