English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Snappish
a. உறுமுகிற, சிடுசிடுப்பான, விரைவும் கடுகடுப்பு முடைய.
Snappy
a. படுவிரைவான, ஆர்வமாகக் கடிக்கும் இயல்புடைய, திடுமெனச் செயலாற்றுகிற.
Snapshot
n. நிழற்பட நொடிப்பெடுப்பு, (வினை.) நொடிப்பு நிழற்படமெடு.
Snare
n. கண்ணி, பொறி, சூழ்ச்சி, சோதனை, மாயக்கவர்ச்சிப்பொருள், (மரு.) கழலையறுவையில் பயன்படுத்தப்படும் கம்பிச்சுருக்கு கண்ணி, (வினை.) கண்ணியிட்டுப்பிடி, பொறிவலைப்படுத்து.
Snares
n. pl. பக்கமுரசத்தில் முடுகிசைக்கான அடிவார்முறுக்கு.
Snarl
-1 n. உறுமுதல், உறுமலொலி, (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு, ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு, சிடுசிடுப்புக்கொள், முணுமுணுப்புக்கொள், குறைபாட்டுக்கொள்.
Snatch
n. கைக்கொள்ளுகை, பற்றி எடுப்பு, பறிப்பு, வலிந்த பற்றீடு, பறிக்கக் கைநீட்டுதல், பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம், வெஃகுதல், பிடுங்கார்வம், கவரும்ஆர்வ அவா, சிறு பகுதி, சிறிது நேர நிகழ்வு, ஆர்வக் கவ்வுதல், (வினை.) கைக்கொள், பற்றியெடு, பறித்தெடு, திடீரெனக் கைப்பற்று, வலிந்து பற்று, கேட்காது எடுத்துக்கொள், பறி, பிடுங்கு, வலிந்துபற்று, பறித்துக்கொண்டுசெல், இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று, கடுமுயற்சியுடன் பெறு, பறிக்கக் கைகளை நீட்டு, வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Snatch-block
n. (கப்.) கயிற்றுப்புழையுடைய மூடு கப்பி.
Snatches
n. pl. இடையிடை முயற்சித் துணுக்குகள், பாட்டு வகையில் இடையிடைப்பகுதிகள், நினைவுத்துணுக்குகள், பேச்சில் இங்கொன்றும் அங்கொன்றுமான பகுதிகள், இடையிடைச் சிறு சிறு கூறுகள்.
Snatchy
a. இடையிடைவிட்ட, ஒழுங்கற்ற.
Sneak
n. அற்பக்கோழை, கோட்சொல்லி, மரப்பந்தாட்டத்தில் நிலத்தின் நெடுக வீசப்பட்ட பந்து, (வினை.) திருட்டுத்தனமாகப் பதுங்கிச் செல், அஞ்சியஞ்சிப் பின்னிடு, மறைந்து ஒதுங்கிநழுவு, (இழி.) திருடிக்கொண்டு செல், (இழி.) பள்ளிவழக்கில் கோட்சொல்லு.
Sneakers, n.. Pl.
பைம்மிதிகள், ஓசையற்ற மிதியடிகள்.
Sneak-thief
n. கள்ளன், திறந்த வீட்டில் கதவு-பலகணிவழிப்பதுங்கிக் களவு செய்யுந்திருடன்.
Sneck
n. விசைக்கதவுத்தாழ், விசை, (வினை.) விசைப்பூட்டுப் பொருத்துவி, விசைக்கதவின் தாழிடு.
Sneer
n. ஏளன இகழ்ச்சி, இகழ்ச்சிப்பார்வை, அலக்கழிப்புரை, ஏளனப்பேச்சு, கேலி நகை, (வினை.) இகழ்ச்சியாகச் சிரி, ஏளனச் சொற்கள் பேசு, தலைகுனியச் செய், ஏளனக்குறியால் அவமதிப்புச் செய், ஏளனத்தால் மகிழ்ச்சி குலை.
Sneeze
n. தும்மல், (வினை.) தும்மு.
Snick
n. குறுவெட்டு, சிறு வெட்டுவாய், மரப்பந்தாட்டவகையில் பந்தின் சிறு சாய்வடி, (வினை.) குறுவெட்டிடு, வடுப்படுத்து, சிறு கீறல்போடு, மரப்பந்தாட்டவகையில் பந்தின் போக்கினைச் சற்றே சாய்வாகத் தட்டி விலக்கு.
Snicker
n. குதிரையின் கனைப்பு, வாயிளிப்பு, (வினை.) கனை இளி.
Snickersnee
n. (நகைச்.) சூர்க்கத்தி.
Snide
n. (இழி.) போலிநகை, கள்ள நாணம், (பெ.) போலியான, செல்லாத, கள்ளப்பட்ட.