English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Snider, Snider rifle
n. பிட்டச் சுழல் துப்பாக்கி, பின்வழியே மருந்துகுண்டு அடைக்கப்பெறும் சுழல்துப்பாக்கியின் பழைய வகை.
Sniff
n. மோப்பு, மோந்து பார்க்கை, மூச்சுவலிப்பு, வன்மையாக மூக்குவழிக் காற்றுறிஞ்சுகை, மூச்சு வலிப்பொலி, காற்று வலிப்பளவு, ஒருதடமை உறிஞ்சு காற்றளவு, காற்றின் சுற்றுவீச்சு, சிறு காற்றலை, காற்றின் சிறுவீச்சளவு, மண அலை, (வினை.) மூச்சு வலி, வன்மையாக மூக்குவழி காற்று உறிஞ்சு, சிவ்வொலி செய், மூச்சு வலிப்பொலி செய், மூச்சுவலிப்புமூலம் ஏளனக்குறிப்புக் காட்டு, மூச்சுவலித்து வெறுப்புக் குறித்துக்காட்டு, மூச்சுவலித்து இகழ்ச்சி தோற்றுவி, சிவ்வொலி மூலம் மனக்குறை குறித்துக்காட்டு, நாய்வகையில் சுற்றி மோந்துபார்த்துக் காலைக்கடிக்க வட்டமிடு, மோந்துபார், சிவ்வென்றுறிஞ்சி மோப்பம் நோக்கு, நீர்மவகையில் சற்றே உறிஞ்சு குறிப்புக்காட்டு, காற்றுவகையில் சற்றே உள்வாங்கிப்பார், தேறல் மணத்திறங் காண், மலர்முகர்ந்து மணநுகர்வுறு, ஊன் முகர்ந்து மணக்கூறு நோக்கு.
Sniffy
a. (பே-வ) வெறுப்புக்கிடமான, இகழ்ச்சிக்குரிய, கெடுநெடியுடைய.
Snifting-valve
n. ஏகுழி, நீராவிப்பொறி உந்துதண்டுக் குழலின் காற்று வௌதவிடுந் தடுக்கிதழ்.
Snigger
n. அடக்கு சிரிப்பு, (வினை.) அடக்கு நகை புரி.
Sniggle
v. தூண்டிரைப்படுத்து, வளையில் தூண்டிரை புகுத்தி விலாங்குமீன் பிடி.
Snip
n. கத்தரிப்பு, நறுக்கு, கொய்வு, தறிப்பு, நறுக்கீடு, (பே-வ) தையற்காரர், (பே-வ) ஓட்டப்பந்தய வழக்கில் கட்டுறுதி நிகழ்வு, கட்டாயமாக நேரிடக்கூடிய ஒன்று, (வினை.) நறுக்கு, நுண்ணியதாக வெட்டு, கத்தரி.
Snipe
n. உள்ளான்குருவி, நீளலகுப் புள்வகை, (வினை.) உள்ளான் வேட்டைக்குச் செல், (படை.) மறைவிடத்திலிருந்து எய், தொலைவிலிருந்து சுடு,பதுங்கித் தொலைஇலக்கு வைத்துச் சுட்டுக்கொல்லு.
Snip-eel
n. நீடலகு விலாங்கு.
Snipe-fish
n. நீளலகு மீன்வகை.
Snippet
n. சிறுவெட்டுத் துண்டு, நறுக்குத்துண்டு, கத்தரிப்புத் துணுக்கு, சிறு பறவை வகை.
Snippets
n. pl. துண்டுதுணுக்கறிவு, துண்டுதுணுக்குத்தகவல்கள், அரைகுறைத் துணுக்குகள், எச்சமிச்சங்கள்.
Snippety
a. சிறுதிறமான, பயனற்ற, துண்டுதுணுக்குகள் கொண்ட.
Snipping
n. வெட்டுத்துண்டு, நறுக்கு.
Snippy
a. துண்டுதுணுக்கான, கஞ்சத்தனமான.
Snip-snap snorum
n. வட்டச்சீட்டாட்ட வகை, குழந்தைச் சீட்டுவிளையாட்டு.
Snipy
a. உள்ளான்குருவி போன்ற.
Snivel
n. மூக்கொழுக்கு, சளி, சிணுக்கம், தேம்பல், கொஞ்சிப்பசப்பல், நீலிக்கண்ணீர் வடிப்பு, பசப்புப் பேச்ச, (வினை.) மூக்குநீர் ஒழுகவிடு, சிணுங்கு, கண்ணீருங் கம்பலையுமாயிரு, குழந்தைபோலக் கரை, ஏங்கியழு, அழுதுபசப்பு, நீலிக்கண்ணீர் வடி, போலி ஒப்பாரி வை, அழுது ஏமாற்று.
Snob
n. பிலுக்கர், தளுக்கர், போலிப்பகட்டர், நடிப்புப்பெருமையாளர், பதவி வேட்டையாளர், போலிக் குடி மதிப்பாளர், போலி உயர்வுதாழ்வுக் கணிப்பாளர்.
Snobbery
n. நாகரிகப்பட்டு, போலி உயர்வுப்பகட்டு, போலி உயர்வுதாழ்வுக் கணிப்பு, போலி உயர்வுதாழ்வு வேறுபாட்டுப் பண்பு, போலி ஒய்யார நடை.