English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Snobbish
a. போலி ஒய்யாரமான, பகட்டிறுமாப்புடைய.
Snobbishness
n. போலி நாகரிகப்பகட்டு மனப்பான்மை, போலி உயர்வுப்பகட்டு.
Snobling
n. புதுநிலைப் பிலுக்கர், அற்பப் பகட்டர்.
Snobocracy
n. போலிப்பகட்டர் குழுமம்.
Snoek
n. உணவுக்குரிய ரிய கடல்மீன் வகை.
Snood
n. இழைக்கச்சை, ஸ்காத்லாந்தில் கன்னிமைக்கு அறிகுறியாகக் கருதப்பட்ட மயிர்க்கொடி, கடற் செம்படவர் தூண்டிற்கயிறு இணைக்குஞ் சிற்றிழை.
Snook
-1 n. கடல்மீன் வகை.
Snook
-2 n. துச்சக்குறிப்பு, மூக்கின்மேல் பெருவிரலை வைத்து மற்ற விரல்களை விரித்துக்காட்டும் சைகை.
Snooker
n. மேடைக்கோற் பந்தாட்ட வகை.
Snookered
a. மேடைக்கோற் பந்தாட்டக்காரர் வகையில் பந்தினை நேரடியாக அடிக்கமுடியாத நிலையிலுள்ள, தோல்வியுற்ற.
Snooksv
int. துச்சக்குறிப்புக் காட்டும் இடைச்சொல்.
Snoop
v. (பே-வ) அழையா வீட்டில் நுழை, வட்டமிட்டு ஒட்டுப்பார், திருட்டுத்தனஞ் செய்.
Snooper
n. தகாவழித் தலையீட்டாளர், தனக்குத் தொடர்பில்லாதனவற்றுள் நுழைந்தாய்பவர்.
Snooty
a. (பே-வ) தன்னகந்தையுடைய.
Snooze
n. கண்ணயர்வு, பகல்நேரச் சிறுதுயில், (வினை.) கண்ணயர்வுறு, பகல்நேரத்திற் சிறுதுயில் கொள், கருத்தில்லாமல் சோம்பிக் கழி.
Snore
n. குறட்டை, (வினை.) குறட்டைவிடு, குறட்டை விட்டுக்கொண்டே காலங்கழி, குறட்டையிடும் நிலையில் எய்தப்பெறு.
Snort
-1 n. மூக்கின் சீறல், சீறொலி, நீராவிப்பொறியின் பீற்றொலி, (வினை.) செறுமு, குதிரைவயல் மூக்குவழிச் சீற, செறுமலொலி செய், செறுமி எதிர்ப்புத்தெரிவி, சீறிக்கொட்டு, சீற்றத்துடன் உரை.
Snort
-2 n. முக்குளிப்புக்கலம், நீண்டநேரம்நீரில் மூழ்கியிருக்கவல்ல நீர்முழ்கிக் கப்பல்.
Snorter
n. செறுமுபவர், (பே-வ) உருமுப்புயல், பேரிரைச்சலான புயற்காற்று, விறுவிறுப்பாட்டம், புயல்வீச்சு நடனம்.
Snot
n. (பே-வ)மூக்கொழுகல், கயவன்.