English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Snotty
n. (பே-வ) கப்பற் பணியாள், (பெ.) மூக்கு வடிகிற, முக்குச்சளியினால் அழுக்கடைந்த, (பே-வ) நீழனான, (பே-வ) தொந்தரவூட்டப்பட்ட, சிடுசிடுப்பான.
Snout
n. முகறை, நீள்மூக்கு, மூஞ்சி, நீள் அலகு, கூர்முகவாய், கூம்புகூறு, குழாய் மூக்கு.
Snout-beetle
n. நீள் அலகு விட்டில்வகை.
Snouted
a. கூர்முகறையுடைய, நீள்மூக்குடைய, கூர்முகம் பொருத்தப்பெற்ற, நீள்மூக்கு வடிவமுடைய.
Snout-ring
n. முகறை வளையம், வேர்காப்பு வளையம், செடிகளை வேருடன் கிளறுவதைத் தடுப்பதற்காகப் பன்றியின் மூக்கிலிடப்படும் வளையம்.
Snouty
a. முனைத்த நீள்முகறையுடைய, நீள்முகறை போன்ற, தன்னகந்தையுடைய, திண்ணக்கமுடைய.
Snow
-1 n. வெண்பனி, பனித்திரை, பனிமழை, பனிவெண்பொருள், பனித்திரள், பனிச்சேறு, பனிக்குழம்பு, பனிச்சாந்து, வெண்டுகில், ஒரு பனிப்பருவமுறை, நாரை, வெண்சீமை இலந்தைக்கனிவகை, கரிய ஈருயிரகைக் குழம்பு, (பே-வ) உடல் மரமரப்பூட்டும் தென் அமெரிக்க செடி மருந்துச்சரக்கு வகை, (வ
Snow
-2 n. சிறிய இரு பாய்மரக் கப்பல் வகை.
Snowball
n. பனித்திரள், எறிபொருளாகப் பயன்படும் பனி மொந்தை, திரள்பிழம்பு நிதி, பங்கு வரியாளர் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பங்கு வரியாளர்களைச் சேர்க்க வேண்டுமென்னும் திட்டப்படி வளரும் நிதி, பழப்பொதியடை, அரிசிமாவில் ஆப்பிள் பழம் வைத்துச் சமைத்த பிட்டு, (வினை.) பனித்திரளையால் அடி, பனித்திரளையாலடித்துப் பந்தயம் விளையாடு.
Snowball-tree
n. வட்டப் பனிமலர்ச்செடிவகை.
Snow-berry
n. வௌளைப்பழங்களையுடைய தோட்டப்புதர்ச்செடிவகை.
Snow-bird
n. வௌளைக்குருவி வகை.
Snow-blind
a. பனிக்குருடான, பனிப்பாள ஔதவீச்சினால் விழிப்பார்வை மந்தமாக்கப்பட்ட.
Snow-blindness
n. பனிக்குருடு, பனிப்பாளஔதவீச்சினால் ஏற்படும் பார்வைக்கேடு.
Snow-blink
n. பனிவுருநிழல், வானத்தில் தோன்றும் பனிப்படலத்தின் ஔதநிழல்.
Snow-boots
n. pl. பனிப்பாதுகை, பனியில் நடப்பதற்கான புதை மிதியடி.
Snow-bound
a. பயணஞ்செய்ய முடியாதபடி பனிச்சேற்றினால் தடைப்பட்ட.
Snow-cap
n. வௌளைச் சூட்டுடைய பாடும்பறவை வகை.
Snow-capped
a. பனிமூடிய முப்ட்டினையுடைய.
Snow-drift
n. காற்றினால் ஒதுக்கிக் குவிக்கப்பட்ட பனித்திரள்.