English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spottiness
n. புள்ளியுடைமை, தூய்மையின்மை.
Spotty
a. புள்ளியுடைய, தூய்மையற்ற.
Spouse
n. வாழ்க்கைத் துணை, கணவன், மனைவி.
Spout
n. குழாய்விளிம்பு, கிண்ணிமூக்கு, கெண்டிவாய்க்குழல், மோட்டுத் தூம்பு, மதகுவாய், பீற்றுவாய், நீர்த்தாரை, எழுநீருற்று, கூல முதலியவற்றின் கொட்டு தாரை, திமிங்கில ஊற்றுவாய்த் தாரை, நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை, கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு, அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி, அடைமானக் கடை, நீர்வீழ்ச்சி, (வினை.) பீற்று, கொட்டு, தாரையாக ஊற்று, கொப்பளி, பீறி வௌதப்படு, கொட்டுறு, பாய்ந்தொழுகு, தாரையாக ஒழுகு, திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி, தொடர்ந்து முழங்கு, ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு, சொற்பொழிவாற்று.
Spouter
n. கொப்பளிப்பவர், கொப்பளிப்பது, எண்ணெய்க் கிணற்றின் எழுநீருற்றுவாய், ஊற்றுவாய் கொப்பளிக்கும் திமிங்கிலம், திமிங்கில வேட்டைக்கப்பல், சொற்பொழிவாளர்.
Spout-hole
n. திமிங்கிலத்தின் உயிர்ப்புப்புழை ஊற்று வாய்த் தாரை.
Spoutless
a. குழல்வாயற்ற, தூம்பற்ற, பீற்றுவாய் விளிம்பற்ற, திமிங்கில வகையில் ஊற்றுவாய்த் தாரையற்ற.
Spouty
a. மிதக்கும்போது நீர் பீற்றுகிற.
Sprag
n. உந்துகலச் சக்கரத் தடுப்புக் கட்டை, சுழற்சித் தடுப்புக் கம்பி, சக்கரம் பின்னுருளாது தடுக்கும் காப்பமைவு.
Sprain
n. சுளுக்கு, சுளுக்கு வீக்கம், (வினை.) சுளுக்குவி, கணுக்கால்-மணிக்கட்டு முதலியவற்றின் வகையில் முறுகவி.
Spraints
n. pl. நீர்நாய் விட்டை.
Sprang
v. 'ஸ்பிரிங்1 என்பதன் வழக்கமான இறந்த கால வடிவம்.
Sprat
n. அயிரை போன்ற சிறு உணவு மீன் வகை, (பே-வ) சவலை, மெலிந்த குழந்தை, (வினை.) அயிரை வகைச் சிறுமீன் பிடி.
Sprat-day
n. அயிரை வகைச் சிறுமீன் பருவம்படுநாள், நவம்பர் ஹீஆம் நாள்.
Sprawl
n. சப்பைக் கிடை, கைகால் பரப்பிக்கொண்டு கிடக்கும் நிலை, சப்பாணி நடை, கைகால் பரப்பிக்கொண்டு செல்லும் இயக்கம், (வினை.) கைகால் பரப்பிக்கிட, பரப்பு முழுவதும் நிரப்பக்கிட, கைகால் பரப்பிக்கொண்டு அருவருப்பாக நட, செடி வகையில் தாறுமாறாகக் கிளைபரப்பிக்கொண்டு வளர், கையெழுத்து வகையில் ஏறுமாறான வரைகளை உடையவையாயியலு, (படை.) ஒழுங்கின்றிக் கலப்பாகப் பரவு.
Spray
-1 n. திவலை, சிதறு, நுண்டுளி, தூவானம், மழை அல்லது அலையோர ஈரத்திவலைக் காற்று, சிதறுகலத்தின் சிதறலை நுண்டுளி, மருத்துநீர்ச் சிதறணுத்திவலை அணுத்திவலைச் சிதறலுக்கான மருத்துநீர்க்கலவை, (வினை.) நுண்டுளிசிதறடி, திவலை தூவு, திவலையை மேலே மோதுவி, திவலை பீற்று, திவல
Spray
-2 n. தளிரிளங்கிளை, பூங்கொம்பு, கிளைப்பூங்கொத்து, பூங்கொம்பணி, பூந்தளிக்கொம்பு உருவாகப் புனையப்பட்ட அணிமணி, கப்புக்கவர்க் கிளைப்பு, கப்புக்கவர் போன்ற வடிவமைவு, (வினை.) கப்புக்கவராகக் கிளைப்புறு, கப்புக்கவராகப் பரவுறு.
Sprayboard
n. திவலை தாங்கி, படகின் பக்கமீது திவலைகள் பட்டுக் கெடாமல் தடுக்கும் பலகை.
Sprayer
n. பூவாளி, தௌத வாளி.