English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stogie, stogy
கனமான புதைமிதி, (பெ.) கனத்த.
Stoic, stoic
சீனோ, (கி.மு.30க்ஷ்-261) என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின் மாணவர், கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாட்டாளர், இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாட்டாளர், கடுந் தன்னடக்க வாதி, நடுநிலை உள்ளத்துரவோர், (பெ.) சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய, சீனோவின் கோட்பாடு சார்ந்த, இன்பதுன்ப நடுநிலையுணர்வுக்கோட்பாடு சார்ந்த, இன்பதுன்ப நடுநிலை உணர்வுடைய கடுந் தன்னடக்கம் வாய்ந்த.
Stoical
a. இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாடு சார்ந்த, இன்ப துன்ப நடுநிலை உணர்வுடய, கடுந் தன்னடக்கம் வாய்ந்த, சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய, சீனோவின் கோட்பாடு சார்ந்த.
Stoically
adv. கடுந் தன்னடக்கத்துடன்.
Stoicism
n. பண்டைக் கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாடு, இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு, விருப்பு வெறுப்பற்ற நிலை, கடுந் தன்னடக்கம், கடுந் தேவைக்கட்டப்பாட்டு நிலை, தன்முனைப்பழித்த கடுந்துறவு நிலை.
Stoke
v. உலைக்கு எரிபொருளுட்டிப் பேணு, உலையனலுக்கு விறகூட்டி வளர், நீராவி இயந்திரத்துக்கு எரிபொருளுட்டி வளர், எரியூட்டாளராகச் செயலாற்று, (பே-வ) விரைந்து உணவுகொள்.
Stokehole, stokehold
நீராவிக் கப்பலின் உலைக்கள அறை.
Stoker
n. உலையூட்டி, நீராவி இயந்திரத்துக்கு எரிபொருளுட்டுபவர், நீராவிக்கப்பல்களின் இயந்திர உலைகளுக்குக் கரிபோடுபவர், சூளைகாப்போர், எரிபொருளுட்டும் கருவி.
Stole
-1 n. பண்டை ரோமாபுரி மாதர் புறஅங்கி, சமயகுர மாரின்தோளணிப்பட்டி, மாதர் தோளாடை அங்கி.
Stole
-3 v. 'ஸ்டீல்1 என்பதன் இறந்தகாலம்.
Stolen
-1 a. திருடப்பட்ட, மறைவிற் செய்த.
Stolen
-2 v. 'ஸ்டீல்' என்பதன் முடிவெச்சம்.
Stolid
a. எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, உணர்ச்சியற்ற, மந்தமான, விடாப்பிடியான.
Stoll-ball
n. சஸெக்ஸ் பகுதியல் பெண்கள் விளையாடும் மரப் பந்தாட்ட வகை.
Stolon
n. விழுதுக்கிளை, வேர்விட்டுப்புது வளர்ச்சி தோற்றுவிக்கும் படர்நிலை அல்லது சாய்நிலைக் கிளை, ஓடுமுளைத்தண்டு, பாசி வகையில் இலை தோற்றுவிக்கும் அடிநிலப் படர் தண்டு, (வில.) தண்டுவம், கூட்டுயிரிலிருந்து தண்டுவேர் போல் வளரும் புறவளர்ச்சி.
Stoma
n. பைம்புழை, செடியினத்தின் பசும்பகுதிகளின் மேல், தொலியூடாக வளியுயிர்க்க உதவும் நுண்புழைவாய்.
Stomach
n. இரைப்பை, அகடு, அடிவயிறு, அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று, பசியார்வம், பசிச்சுவை, விருப்பச்சார்வு, சார்பொருக்கம், தாங்குரம், அக்கறைச்சார்பு, ஊக்கச் சார்பு, (வினை.) சுவைத்து உண், உண்ணப்பெறு, சுவைவிரும்பு, நுகர், பொறு, ஏற்றுச் சமாளி.
Stomach-ache
n. வயிற்று வலி, வயிற்று நோவு.
Stomach-cough
n. சிறுகுடல் அழற்சி இருமல்.
Stomacher
n. அகட்டங்கி, மகளிர் முன்றானை முகப்பு, செமிப்பு மருந்து.