English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Straits
n. pl. இக்கட்டான நிலை, இடைஞ்சல், வறுமை, நல்குரவு, துன்பம்.
Strake
n. நீள்வரிப்பட்டி, கப்பலின் முன்பகுதியிலிருந்து பின் பகுதி வரையுள்ள தொடர்ச்சியான பலகை அல்லது தகட்டு அடைப்பு.
Stramineous
a. வைக்கோல் சார்ந்த, வைக்கோல் போன்ற, வைக்கோல்நிறமுடைய, நோய்தான, பயனற்ற, கவைக்குதவாத.
Stramonium
n. ஊமத்தைச் செடி வகை, ஊமத்தை இலை-காயிலிருந்து எடுக்கப்படும் சுபநோய் மருந்து.
Strand
-1 n. கடலோரம், ஏரிக்கரை, ஆற்றங்கரை, (வினை.) கப்பல் வகையில் தரைதட்டு, இக்கட்டுட்படுத்து, முடைப்படுத்து, தனியே துணையின்றி விட்டுச்செல்.
Strand
-2 n. புரியிழை, முறுக்கிழை, உட்கூறு, கூட்டின் ஓர் ஆக்கக்கூறு, (வினை.) அவிழ், ஒரு புரியைப் பிரித்தெடு.
Stranded
a. இக்கட்டினுட்பட்ட, பொருள்முடையால் செயலிழந்த, கருவியின்றிச் செயலற்றுள்ள, தனித்துப் பின்தங்க விடப்பட்ட.
Strange
a. நொதுமலான, முன்பின் தெரியவராத, பழக்கமற்ற, பழக்கப்படாத, எதிர்பாராத, தனக்குரியதல்லாத, இனமறியப்படாத, அன்னியமான, வழக்கமீறிய, பொதுப் பண்பு கடந்த, பொதுநிலை மீறிய, புத்தியல்பு வாய்ந்த, தனிப்பட்ட தன்மை வாய்ந்த, தனிப் போக்குடைய, விசித்திரமமான, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விளங்காத, காரணங் கூறமுடியாத, தடுமாற்றந் தருகிற.
Stranger
n. வௌதயார், வௌதநாட்டவர், தொலைநாட்டவர், தொலை ஊரினர், பழக்கமற்றவர், புதியவர், ஏதிலார், புதுவட்டாரத்தவர், புதுவரவாளர், விருந்தினர், உறவினரல்லாதவர், புதிது பிறந்த குழந்தை, உறுப்பினரல்லாதவர், அக்கறையற்றவர், அக்கறைக்குரியவரல்லாதவர், பழகாதவர், விவரமறியாதவர், அறியாதவர், தெரியாதவர், விருந்து குறிப்பதாகக் கருதப்படுஞ் செய்தி.
Strangle
v. குரல்வளை நெரி, சங்கை நெரித்துக் கொல், மூச்சுத் திணற அடித்துக்கொல், திக்குமுக்காட வை, கழுத்துப்பட்டிகை வகையில் கழுத்தை அழுத்து, இயக்கம்-உணர்வு வகையில் அடக்கு, வௌதவிடாது கீழ்ப்படுத்தி வை.
Strangle hold
n. சாப்பிடி, வர்மப்பிடி, அரசியல் துறையில் தனியார் ஆதிக்கப்பிடி, செல்வத்துறையில் தனிமனிதர் ஆக்க அழிவுக் கைப்பிடி.
Strangles
n. pl. குதிரை-கழுதை ஆகியவற்றின் நீர்க்கோப்புத் தொற்றுநோய்.
Strangle-weed
n. ஒட்டுயிர்ச்செடி வகை.
Strangulate
v. கழுத்தை நெரித்துக்கொல், அழுத்திஇயக்கந்தடு, (மரு.) அழுத்தமூலம் குருதியோட்டந் தடு.
Strangulated
a. நெரிவுற்ற, வழி இடுங்கிய.
Strangulation
n. அமுக்கம்,அழுத்தத்தடை.
Strangury
n. நீர்க்கடுப்பு நோய், சூடுபிடிப்புக் கோளாறு, கட்டுக்கோளாறு, கட்டுப்போடுவதால் செடிகளில் உண்டாகும் நோய்.
Strap
n. வார், தோல் பட்டை, உலோகப்பட்டை, இணைப்புக்கீலின் தகடு, (தாவ.) சிறுமலர் வகைகளின் நாக்கு வடிவப் பகுதி, (வினை.) வாரினாற் கட்டு, பட்டையினால் இணை, கசைவாரால் அடி, தோல்வாரில் கத்தி தீட்ட, (மரு.) அறுவைக்காயத்தின் பகுதிகளை ஒட்டுப்பசை வாரால் இணைத்துக்கட்டு.
Strap-hanger
n. வார்தொங்கலர், உந்துவண்டி-புகைவண்டி ஆகியவற்றில் நின்று செல்லும் பயணர்.
Strap-laid
a. கயிற்று முடைவான, பட்டை முடைவான.