English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stout-heartedly
adv. நெஞ்சுரத்துடன், தீரமாக, விடாப் பிடியுடன்.
Stout-heartedness
n. நெஞ்சுரமுடைமை, உளவலிமையுடைமை, வீரமுடைமை.
Stoutish
a. தோற்றத்தில் பருத்த, ஓரளவு தடித்த.
Stoutly
adv. விடாப்பிடியாய், உறுதியுடன்.
Stoutness
n. பருத்த தன்மை, தடிப்பு, விடாப்பிடியுடைமை, உறுதிப்பாடு.
Stove
-1 n. கணப்படுப்பு, செயற்கை வெப்ப வீடு, (வினை.) செயற்கை வெப்ப வீட்டில் வளரச்செய்.
Stove
-2 v. 'ஸ்டேவ்' என்தபன் இறந்த கால வடிவங்களில் ஒன்று.
Stove-pipe
n. கணப்படுப்புப் புகை செல் குழாய்.
Stover
n. தீவனம், மாத்தீனி.
Stow
v. செம்மிவை, நன்கு செருகி ஒழுங்குபடுத்திவை, வாய்ப்பாகத் திணித்து வை, சேகரித்து வை, (இழி.) விலக்கித் தள்ளு, பழக்கத்துக்கு இடங்கொடாதிரு.
Stowage
n. தொகுப்பு, தொகுப்பறை, தொகுப்புக் கூலி.
Stowaway
n. கட்டணமில்லாக் கரவுப்பயணி, கப்பலிற் கட்டணமில்லாமலே ஏறி ஔதந்திருப்பவர்.
Stow-wood
n. செம்மு கட்டை.
Strabismus
n. மாறு கண் பார்வை, ஓரக்கண்ணாய்ப் பார்த்தல், மாறுகண்.
Strabotomy
n. விழிவெட்டறுவை, ஓரக்கண் பார்வை நீக்க விழிமண்டலம் பிளக்கும் கண் அறுவை.
Straddle
n. இடப்பு, கால்பரப்பிய நிலை, அகட்டமர்வு, கால் விரித்துட்காரும் நிலை, கவட்டுநடை, கால்பிளந்த நடை, அருவருப்பான நிலை, அருவருப்பான போக்கு, இருவழிப் படர்வு, தொட்டுத்தொடா நிலை, இரண்டுங்கெட்ட நிலை, கவர்வுநிலை, வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை, வரை கவிவுக் குத்தகை, பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை, சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம், (வினை.) இடவு, கால்பரப்பிக்கொண்டிரு, அகட்டித்தமர், கவட்டித்து நட, கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல், இரண்டுங்கெட்ட நிலை குறி, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில், அகலப்பரப்பி வை, பரவலாக வேட்டிடு, முன்பின் கவித்து வேட்டிடு, பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை, வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு.
Strafe
n. பரவல் குண்டுவீச்சு, குண்டுவீச்சுத் தொல்லை, உதிர் வேட்டெறிவு, தாக்குதல், கண்டனம், கடிந்துரை, அடி, உதை, வசவு, (வினை.) பரவலாகக் குண்டுவீச்சு, உதிர் வேட்டிடு, குண்டு வீசித் தொல்லை கொடு, தாக்கு, கண்டி, கடிந்துரை.
Straggle
v. பிரிந்து செல், வழவிலகிச் செல், சிதறிச் செல், குறிக்கோளின்றித் திரி, இங்குமங்குமாகச் செல், கட்டுக்குலைவுறு, இங்கொன்றுமங்கொன்றுமாயிரு, இடையிடையே நிகழ், செடியின வகையில் நீண்டு களையாக வளர்.
Straggler
n. அலைந்து திரிபவர், திட்டமின்றிச் செல்பவர், வழி விலகிச் செல்பவர், பிரிந்து செல்பவர், கலைந்து செல்பவர்.
Straggling
n. அலைந்து திரிதல், (பெ.) அலைந்து திரிகிற, திட்டமினறிச் செல்கிற, வளைந்து வளைந்து செல்கிற, சிதறலான, இங்கொன்றும் அங்கொன்றுமான.