English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Subject
-1 n. குடிமகன், குடிமகள், பிரஜை, ஆளப்படுபவர், ஆட்சிக்கு உட்பட்டவர், நாட்டில் மன்னரல்லாத ஒருவர், வாழ்குடி, குடியுரிமையாளர், குடியாள், குடியானவர், குடியாண்மை ஏற்பவர், கீழுரிமையாளர், அடங்கியவர், ஆட்பட்டவர், ஆணைக்கு உட்பட்டவர், ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி,
Subject
-2 v. அடிப்படுத்து, கீழடக்கு, கீழ்ப்படுத்து, ஆட்படச்செய், செயலுக்கு உள்ளாக்கு, விளைவுக்கு உரியதாக்கு.
Subject-heading
n. பொருள் அட்டவணை.
Subjectify
v. அகநிலைப்படுத்து, அகநிலைச்சார்பாக்கு.
Subjection
n. அடிப்படுத்துதல், கீழ்ப்படுத்துதல், ஆட்சிக்குட்பட்ட நிலை, கீழ்ப்படிந்த நிலை, அடிமை நிலை, தன்னுரிமையற்ற நிலை.
Subjective
n. (இலக்.) எழுவாய் வேற்றுமை, (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய, அக எண்ணஞ் சார்ந்த, தன் உள்ளுணர்வுக்குரிய, உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த, கற்பனை நிலையான, கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற, தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற, புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத, (இலக்.) எழுவாய் சார்ந்த.
Subjectivism
n. அகநிலை வாய்மைக்கோட்பாடு, அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு.
Subjectivist
n. அகநிலை வாய்மைக் கோட்பாட்டாளர், அக நிலைவாய்மைக்கே பெருமதிப்புக் கொடுப்பவர், அக உணர்வுச் சார்பாளர்.
Subjectivistic
a. அகநிலை வாய்மைக் கோட்பாட்டுச் சார்பான, அகநிலை வாய்மைக் கோட்பாடு முனைப்பான.
Subjectivity
n. அகநிலை, உள்ளுணர்வுச் சார்பு.
Subjectivize
v. அகநிலை மயமாக்கு, உள்ளுணர்வு நிலைப்படுத்து.
Subject-matter
n. நுதல் பொருள், கூறப்படுஞ் செய்தி, அடிமூலச் செய்தி, உட்கிடைப்பொருள்.
Subject-object
n. உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம்.
Subjoin
v. பின்னோட்டு, இறுதியிற் சேர்.
Subjoinder
n. பிற்குறிப்பு, துணை ஒட்டுக்குறிப்பு.
Subjoint
n. துணைமைக்கண மூட்டு, பூச்சி வகைகளின் கை-கால் மூட்டு உட்பிரிவுகளில் ஒன்று.
Subjudge
n. கீழ்முறைமன்ற நடுவர், சதரமீன்.
Subjugate
v. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து,தோல்வியுறச் செய், வென்று வயப்படுத்து, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவா, அடிமை நிலைப்படுதது.
Subjunction
n. கீழிணைப்பு, பின்னொட்டிணைப்பு, பின்னிணைப்புப்பகுதி.
Subjunctive
n. (இலக்.) வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு, கருத்துப் புனைவியல் பாங்கு வினையுரு, (பெ.) துணைக்கீழிணைப்பான, பின்னோட்டமான, (இலக்.) வினைச் சொல் வகையில் கருத்துப் புனைவியல் பாங்கான.