English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sublunar
n. (செய்.) இம்பர், இவ்வுலக வாணர், (பெ.) இம்மைசார்ந்த, பூவுலகிற்குரிய.
Sublunary
a. திங்களுக்குக் கீழான, மதிக்கீழான.
Sublunate
a. பிறையணுக்க வடிவுடைய.
Sublunation
n. அரைகுறை இடப்பிறழ்ச்சி.
Submachine-gun
n. இயந்திரக் கைத்துப்பாக்கி.
Submammary
a. மார்படுத்த.
Subman
n. விலங்குநிலை மனிதர், மனிதப்பண்பு குன்றியவர்.
Submarginal
a. விளிம்பருகான, புறவெல்லைக்கோடிக்கு மிக அணித்தான, எல்லைக்குச் சிறிது உட்பட்ட.
Submarine
n. நீர்முழ்கி, கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்கவல்ல போர்க்கப்பல், கடலடி வாழ்பவர், கடலடி வாழ்வுயிர், (பெ.) கடலின் கீழ் இருக்கிற, கடலடியிற் செயற்படுகிற, கடலடியிற் பயன்படுத்தப்படுகிற, கடலின் கீழ் அமைக்கப்பட்ட.
Submariner
n. நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர்.
Submaster
n. பள்ளித் துணையாசிரியர்.
Submaxillary
a. கீழ்த்தாடை சார்ந்த, கீழ்த்தாடைக்கடியிலுள்ள
Submediant
n. (இசை.) சுரவரிசை வகையின் ஆறாவது சுரம்.
Submental
a. (உள்.) மோவாயின் கீழான.
Submerge
v. மூழ்கடி, நீருக்கடியில் வை, நீருள் அமிழ்த்து,வௌளத்தில் மூழ்குவி, வௌளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு, மேற்சென்று வௌளம் பெருக்குவி, நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ், நீர்நிலையின் அடிக்குச் செல், வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு.
Submerged
a. அமிழ்ந்த, நீருள் ஆழ்ந்த, வௌள மீதூரப்பெற்ற, நீரினுள் வளர்கிற, வறுமைத்துயரில் முற்றிலும் ஆழ்ந்த.
Submergence
n. அமிழ்த்தீடு, அமிழ்வு.
Submerse
v. (அரு.) அமிழ்த்து.
Submersed
a. (தாவ.) நீருள் வளர்கிற.
Submersible
n. எளிதமிழ்வுப்படகு, விரும்பினால் எளிதில் மூழ்கடித்துவிடக்கூடிய படகு, (பெ.) நீரில் மூழழூகடித்துவிடக்கூடிய.