English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Subscription
n. அடியில் எழுதுதல், அடியெழுத்து, கீழே எழுதப்பட்டது, கடையெழுத்து, கையொப்பம், இசை விணக்கம், ஒப்புதல் தெரிவிப்பு, நிலைவரி, சந்தா, உறுப்பினர் கட்டணம், தவணை வரி விற்பனை முறை, நிதி-கழகம் முதலியவற்றிற்குத் தொகை வழங்கீடு, கையொப்பம் பணம்.
Subsecive
a. பின்னும் மீந்திருக்கிற, தேவைக்கு மேற்பட்ட.
Subsellium
n. மடிப்பு நிமிர்விருக்கை, திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Subsensible
a. உணர்ச்சி வரம்புக்குக் கீழுள்ள.
Subseptule
a. 1:ஹ் என்னுந் தகவுப்படியுள்ள.
Subsequent
a. பின் தொடர்ந்து வருகிற, பிற்பட்ட, பின் தொடர்பான, அடுத்துவந்த, பிற்காலத்திதான, பிற்பட நேர்ந்த.
Subsequently
adv. பின்னர், அடுத்து, பிறகு, அதன் பின்.
Subserous
a. நிணநீர்ச்சவ்வின் கீழுள்ள.
Subserve
v. செயல்துணையாகப் பயன்படு, உகந்திரு, அனுகுணமாயிரு, சார்வாயிரு, சாதகமாயிரு, வளர்ச்சிக்கு உதவு.
Subservience
n. கருவிப்பயனுடைமை, கருவிமட்டான பயனுடைமை, கெஞ்சுநிலை, அடிமைநிலை, அடிவருடிப்பண்பு.
Subservient
a. துணைக்கருவியாகப் பயன்படுகிற, கெஞ்சுகிற, அடிமைப்பண்புடைய, அடிவருடி வாழ்கிற.
Subsessile
a. முற்றிலும் காம்பற்றதல்லாத.
Subsextuple
a. 1:6 என்னுந் தகவுப்படியுள்ள.
Subshrubby
a. அடிப்புதர் இயல்பான, அடிப்புதர் நிறைந்த.
Subside
v. சிறுது சிறிதாக வற்று, சிறிது தணி, வடிந்து போ, மறைந்துபோ, நிலம் வகையில் சரிந்து விழு, பரப்பு வகையில் அமிழ்வுறு, இரிவுறு, கட்டிட வகையில் நிலமட்டத்திற்குக் கீழ் அமர்வுறு, கப்பல் வகையில் நீர்மட்டத்திற்குக் கீழ் அமுங்கு, நீரின் இடை மிதவைப் பொருள் வகையில் மெல்ல அடியில் படிவுறு, ஆள் வகையில் கீழமைவுறு, அடங்கியமர்வுறு, செயலொடுங்கியிர, எழுச்சியற்றிரு, அமைவுறு, தணிவுறு, ஆறு.
Subsidence
n. தணிதல், வடிந்து வருதல், அமிழ்வு, அமைவு, படிவுறுதல், அமர்வு, ஒடுங்குதல்.
Subsidiary
n. உதவுபவர், உதவியாளர், உதவிப்பொருள், உதவிப்பொருள் வழங்குபவர், உதவுவது, உதவிப்பொருள் வழங்குவது, கிளை ஆட்சி நிறுவனம், மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேற் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆட்சியின் கீழுள்ள நிறுவனம், (பெ.) துணையாகப் பயன்படுகிற, குறை நிரப்பியுதவுகிற, உடனுதவியான, நிறுவனம் வகையில் துணையாதரவு பெறுகிற, மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேல் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆதிக்கத்திலிருந்து, படை வகையில் உதவிப்பொருள் பெற்ற, மற்றொரு நாட்டினால் கூலிக்கு அமர்த்தப்பெற்ற.
Subsidize
n. துணையாதரவு அளி, படைகளுக்கு வௌதநாட்டிலிருந்து உதவிகொடு, அரசாங்க வகையில் தொழில்களுக்கு உதவிப்பொருள் கொடு.