English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Substantival
a. (இலக்.) பெயர்ச்சொல்லின் இயல்பினதான.
Substantivally
adv. பெயர்ச்சொல்லின் இயல்பினதாக.
Substantive
n. தன்னிலைப் பெயர்ச்சொல், லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல், (பெ.) நிலையான, தனியியலான, பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட, அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத, தன்னிலையான, துணைமை நிலையினதாயிராத, தற்சார்பியலான, ஒட்டு நிலையினதாயிராத, தனிநிலையான, சார்பு நிலையினதாயிராத, (படை.) பொருள் நிலையான, பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத, (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான.
Substation
n. துணை நிலையம்.
Substellar
a. விண்மீனுக்கு நேர்கீழான, நிலவுலகப்பரப்பு வல் விண்மீன் உச்சமாகத் தெரிவதற்கிடமான.
Substemperate
a. மட்டணவிய, மித மண்டலத்தைவிடச் சற்றே குளிர்மிக்க.
Substernal
a. மார்பெலும்பிற்குக் கீழான.
Substitute
n. பதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு.
Substitution
n. பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல்.
Substratum
n. கீழடுக்கு, அடித்தள அடுக்கு, கீழாக இருப்பது, அடிநிலைப்பளாம், அடிநிலத் தளம், அடிநிலைக் கூறு, அடிமூலக் கூறு, பண்புகள் செறிந்த மூலுக்கூறு, அடி உயிர்த்தளம், செடியின வளர்ச்சித்தளம், அடிவாழ்வுத்தளம், உயிரின வாழ்விற்குரிய தளம்.
Substruct
v. கீழே கட்டு, அடிப்படையிடு, கடைகாலிடு.
Substruction
n. கீழ்க் கட்டுமானம்.
Substructural
a. கீழ்க் கட்டுமானஞ் சார்ந்த.
Substyle
n. கதிர்மணி வட்டத்தில் கோல் அமைந்துள்ள வரை.
Subsultive, subsultory
a. வெட்டி வெட்டி இயக்குகிற, சுரித்திழுக்கிற.
Subsultus
n. நடுக்கியக்கம்.
Subsume
v. எடுத்துக்காட்டுச் செய்திகள் வகையில் விதியின் கீழ் உட்படுத்திக் குறிப்பிடு.
Subsurface
a. மேற்பரப்பகத்திற்குக் கீழே.
Subtack
n. ஸ்காத்லாந்து வழக்கில் கீழ்க் குத்தகை.
Subtacksman
n. ஸ்காத்லாந்து வழக்கில் கீழ்க் குத்தகை எடுப்பவர்.