English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Subtangent
n. ஊடுவரையில் தொடுவரை நீட்டம்.
Subtenanch
n. கீழ்க்குடிவாரம்.
Subtenant
n. கீழ்க்குடிவாரத்தார்.
Subtend
v. (வடி.) நாண்வரை-முக்காணப் பக்கம் ஆகியவற்றின் வகையில் கோணத்திற்கு எதிர்வீழ்வாயிரு.
Subtense
n. (வடி.) எதிர்வீழ்வரை, கோண வகையில் எதிர்வீழ்வாகும் நாண்வரை அல்லது முக்கோணப்பக்கம்.
Subterfuge
n. நழுவமைப்பு, தப்புச்சாக்கு, சூழ்ச்சித்தலைக்கீட்டு வாதமுறை, திருக்கு மறுக்கு வாதம்.
Subterhuman
a. மனித இயல்பிற் குறைந்த, மனிதனுக்குக் கீழ்பட்ட.
Subternatural
a. இயல்நிலைக்குக் கீழான, இயற்கை நிலையிற் குறைந்த.
Subterposition
n. கீழ்வைப்பு, கீழ் உள்ள நிலை.
Subterranean
n. பொதியறை வாழ்வோர், பொதியறை, (பெ.) நிலத்திற்குக் கீழான, அடிநிலத்தினுடான, சுருங்கை வழியாயமைந்த, மறைவழிவான.
Subterraneously
adv. அடிநில வழியாக, மறைமுகமாக, மறைவழியூடாக.
Subthoracic
a. மார்புக் கூட்டிற்குக் கீழேயுள்ள.
Subtilize
v. நொய்தாக்கு, நுண்மையதாக்கு, தூய்மைப்படுத்து, நயமுடையதாகு.
Subtitle
n. ஏட்டுத் துணைத்தலைப்பு, சுருக்கத்தலைப்பு, பக்கமோடும் தலைப்புத்துணுக்கு, இரண்டாம் பெயர், திரைப் படச் சுருளின் முனைப்பான முகப்புரை.
Subtle
a. நுட்பமான, நுட்பநுணுக்கமான, நொய்தினம் நொய்தான, சூட்சுமமான, நுண்ணயம் வாய்ந்த, மென்னயமிக்க, உள்ளார்ந்த நுணுக்கமுடைய, நுழைபுலம் வாய்ந்த, கூர்த்த மதியுடைய, கூருணர்வுடைய, நுட்பவேறுபாடுடைய, நுட்பவேறுபாடுகள் காண்கிற, நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள, மென்படர்வான, மறைநுட்பம் வாய்ந்த, புலம்படா நுணுக்க இரகிசயமான, பிடிகொடாதிருக்கிற, நழுவிச் செல்லுந்திறமுடைய, பின்தொடரமுடியாத, நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க, இரண்டகமான.
Subtlety
n. நுட்பநுணுக்கம், நுண்ணயம், நயநுணுக்கம், நுழைநுட்பம், மயிரிழை நுணுக்கம், நுண்ணய வேறுபாடு, மயிரிழை வேறுபாட்டு நுட்பம், நுழைபுலம், மதிநுட்பம், கூருணர்வு, மறைநுட்பம், மர்மத்திறம், பிடிகொடாத்திறம், புரியாத் திறநுட்பம், நழுவுதிறம், தட்டிக்கழிப்புத்திறம், நுண்ணயச் சூழ்ச்சித்திறம், ஈரடி, இரண்டகத்தன்மை, நுட்ப நேர்த்தி நயம்.
Subtly
adv. நுண்ணயத்துடன், மென்னயமாக, மெல்லிழைவு நயத்துடன், கூருணர்வுடன், நுண்ணயச் சூழ்ச்சித்திறம்பட.
Subtonic
n. (இசை.) சுதிக்கு அடுத்த கீழ்ச்சுரம்.
Subtopic
n. உருக்கெடுக்கும் நகரக் கட்டுமானப்பகுதி, அருவருப்பான ஊர்க் கட்டுமானப்பகுதமி.
Subtract
v. கழி, நீக்கு, அகற்ற, பிரித்தெடு, பின்வாங்கிக்கொள், தொகையிலிருந்து பகுதியை எடுத்துவிடு.