English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Subvention
n. உதவித்தொகை.
Subversion
n. தோல்வி, வீழ்வு, அழிவு.
Subversive
a. கவிழ்க்கிற, நிலைகுலைவிகும பாங்குள்ள.
Subvert
v. கவிழ்த்து, தலைமறிவாக்கு, தலைகீழாய்புரட்டு, நிலைகுலைவி, சீர்கெடச்செய், அழி, பாழாக்கு, வீழ்ச்சியுறச் செய்.
Subvertebral
a. தண்டெலும்பின் அடியிலுள்ள, தண்டெலும்புக் கண்டங்களின் கீழுள்ள.
Subvertical
a. பெரும்பாலும் செங்குத்தான.
Subvitreous
a. சற்றே பளிங்குபோன்ற, அரைகுறைப் பளிங்கியல்புடைய.
Subwarden
n. துணைப்பாதுகாவலர்.
Subway
n. சுரங்கப்பாதை, சுரங்க இருப்புப்பாதை.
Succades
n. pl. இன்பழப்பாகீடு, தேம்பாகில் இடப்பெற்றுச் சர்க்கரையில் பதப்படுத்தப்பெற்ற பழவகை.
Succedaneous
a. மாற்றீடான, பதிலாக வழங்கத்தக்க, முடைக்காலப் பதிலீடான.
Succedaneum
n. பகரமறுபொருள், மாற்றுப்பொருள், பகரமாற்றாள், மறுமருந்து, உற்றுழிப் பயன்படும் மறுமருந்துப்பொருள், போலிப் பொன் மாற்றீட்டுப் பல், பொன்னுக்குப் பதிலான போலிப் பொற்கலவையாலான பல்.
Succeed
v. வெல், வெற்றியுறு, வெற்றிபெறு, நோக்கம் ஈடேறப்பெறு, முன்னேறு, நல்வளம்பெறு, வெற்றிகாண், செயல்வகையில் வெற்றியுடன் முடிவுறு, திட்டவகையில் வெற்றியடை, தொடர், பின்வந்து தொடர்வுறு, பதவியில் பின்வரலுறு, மரபில் தொடர், தொடர்ந்து கால்வழியில் வரலுறு, உடமை வல் மரபுரிமையாகப் பெறு, அடுத்து நிகழ்வுறு.
Succeeding
a. பின் வருகிற, அடுத்துவருகிற, பின்வந்த, அடுத்துவந்த, தொடர்ந்த, பின்னுள்ள, வரவிருக்கிற.
Succentor
n. இசைக்குழுத் தலைவரின் ஆட்பேர்.
Succes fou
n. ஆரவார வெற்றி.
Succesive
a. தொடர்ந்து வருகிற, இடையீடின்றித் தொடர்கிற, இடைவிடா வரிசை முறையான.
Success
n. வெற்றி, நற்பயன், ஈடேற்றம், நோக்க நிறைவேற்றம், ஆக்கம், செல்வப்பேறு, புகழாக்கம், புகழுயர்வு, புகழ்ப்பேறு, பதவி உயர்வு, பதவிப்பேறு, வெற்றி எய்தியவர், புகழாக்கம் பெற்றவர், வெற்றிச் செய்தி, புகழாக்கச் செய்தி, உருவெற்றியாளர், உருப்போடப் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர், விளைவு.
Success destime
n. ஏறத்தாழ நல்ல வரவேற்பு.
Successful
a. வெற்றியார்ந்த, செயல்வகையில் நிறைவேறிய, வெற்றிக்குரிய, வெற்றிக்கு வழிவகுக்கிற, ஆள்வகையில் வெற்றிகண்ட, வெற்றியாக்கமுடைய.