English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Successfully
adv. வெற்றியுடன், பயனிறைவுடன், ஆக்கமாக.
Succession
n. தொடர்ச்சி, தொடர்வு, வரிசை, அடுத்தடுத்து வருகை, ஒன்றன்பின் ஒன்றுவருதல், தொடர்ந்து வருவன, மரபுரிமை, தாய உரிமையுடையவர் வரிசை, மரபு வழி, அரசுக்கால்வழி, பதவியுரிமை, தாயவுரிமை,குருவழிக்கால்மரபு, ஆன்மிக மரபு, சமயத் திருவுரிமை மரபு, (உயி.) உயிரிகள் வளர்ச்சி வழிமுறை.
Successional
a. மரபுரிமை சார்ந்த.
Successionist
n. பரம்பரைக் கோட்பாட்டாளர், இயேசுவின் திருமாணவ உரிமை மரபு இன்றியமையாத் தொடர்புடையதென்று நம்புபவர்.
Successively
adv. தொடர்வதாய், வரிசையாய், இடையீடற்றதாய், தொடர்ச்சியாய், நிரனிரையாக, வரிசைமுறைப்படியாக.
Successor
n. பின்வருவோர், மரபில் பின் தொடர்வோர், பின்னமர்வாளர், தொடர்வது.
Successor ship
n. பின்மரபுத் தோன்றல்நிலை, பின்னுரிமையாளர் நிலை, மரபுத்தொடர்ச்சி முறைமை, மரபுத்தொடர்ச்சி ஆள் வகையில் மரபுரிமை பற்றிய நிலை.
Succictly
adv. செறிவாக, மணிச்சுருக்கமாக.
Succictness
n. செறிவு, மணிச்சுருக்கத்தன்மை.
Succinct
a. செறிவான, செறிக்கப்பெற்ற, சுருக்கமான, மணிச்சுருக்கமான.
Succory
n. நீல மலர்வகை, போலிக்காப்பிப்பொடி வகை, சிக்கரி.
Succotash
n. அவரை சோள வேவல் பண்டம்.
Succour
n. உற்றுழி யுதவி, காலத்தாற் செய்த உதவி, படையுதவி, உதவிக்கு வரும் படை, (வினை.) உற்றுழியதவு, இடரில் உதவிக்கு வா, இடுக்கணிடையே உதவி வழங்கு.
Succuba, succubus
துயின் மோகினி, துயிலும் ஆடவருடன் வன்புணர்ச்சி புரிவதாகக் கருதப்படும் பெண்பேய்.
Succulence
n. சாற்றுச்செறிவு, சாறுதசைக் கண்ணிறுக்கத் தன்மை.
Succulent
a. சாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய.
Succursal
n. நிறுவனத்தின் கிளை, (பெ.) திருக்கோயில் வகையில் துணைமையான, கிளைநிலையான.
Such
n. அத்தகையது, அவ்வகைப்பட்டது, அது, அத்தகையவை, அவ்வகைப்பட்டவை, அவை, மேற்கூறப்பட்டது, மேற்கூறப்பட்டவை, குறிப்பிடப்பட்டவர், குறிப்பிடப்பட்டவர்கள், அத்தகைய ஒன்று, அம்முறையான ஒன்று, அவ்வகைப்பட்டவை, அவ்வகைப்பட்டவர்கள், என்பது போன்றத, என்பது போன்றவை, என்பது போன்றவர், என்பது போன்றவர்கள், (பெ.) அதே வகையான, அதே அளவான, அவ்வகைப்பட்ட, அப்படிப்பட்ட, அத்தகையா, அவ்வியல்புடைய, அந்த அளவான, அவ்வளவு பெரிதான, இம்மாதிரியான, இதுபோன்ற, கூறப்பட்ட முறையான, குறித்த முறையான, இந்நிலைக்கொத்த, இந்நிலையில் உய்த்துணரத்தக்க, இச்சூழலுக்கேற்ற, மேற்சொல்லப்பட்ட, மேற்சொல்லப்பட்ட வகையான, எவ்வளவோ நல்ல, எத்துணையோ மோசமான, என்று கூறும் அளவான, எவ்வளவோ-அவ்வளவான.
Such-and-such
n. இன்னின்னார், (பெ.) இன்னின்ன.
Suchlike
n. அம்மாதிரியானவர், அவ்வகைப்பட்டது, அவ்வகைப்பட்டவை, (பெ.) அவ்வகையான, அதுபோன்ற.