English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Suddenly
adv. உடனடியாக, எதிர்பாராமல்.
Suddenness
n. திடீரெனல், திடீர் நிகழ்வுநிலை.
Sudoriferous
a. சுரப்பி வகையில் வியர்வை வௌதப்படுத்துகிற.
Suds, n. pl.
சவர்க்கார நீர் நுரை.
Sue
v. வழக்காடு, வழக்கிடு, மீது வழக்குத்தொடு, மன்றாடு, முறைமன்றத்தில் வாதாடு, மனுச்செய், முறையிடு, வேண்டு, கெஞ்சிக்கேள், குறையீடு தெரிவி, குரையிரந்து வேண்டுவி, மணங்கோரு, மணஇணைவுநாடு, மணவினையிற்கோரு.
Suede
n. துறுதோல், கையுறை காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிடப்படா வௌளாட்டுக் குட்டித்தோல் வகை, துறதோல் நிறம், (பெ.) துறுதோலாலான, துறுதோல் நிறம் வாய்ந்த.
Suet
n. ஊன் கொழுப்பு, எருது-ஆடு முதலியவற்றின் குண்டிக்காயிடைச் சேரும் திண்கொழும்பொருள்.
Suffer
v. வருந்து, நோவுறு, துன்புறு, துயருறு, இடுக்கணுறு, அவதியுறு, இழப்புக்கு ஆளாகு, தீங்குறு, தீமைக்கு ஆளாகு, ஒறுக்கப்பெறு, தண்டனைக்கு ஆளாகு, சாத்தீப்புப் பெற்றவர் வகையில் கொலைத்தண்டனைக்கு உட்படு, விடு, இசைவளி, விளைவுக்கு உள்ளாகு, பாதிக்கப்பெறு, செயலுக்கு உட்படு, படு, தாங்கு, நுகர், வாளாபொறுத்துக்கொண்டிரு, ஏற்றமைவுறு.
Sufferance
n. ஏற்பமைவு, தடை எதிர்ப்பின்மை, மெல்லிசைவு, தாட்சணியம், வாய்பேசா விட்டுக்கொடுப்பு, விட்டுக்கொடுப்பிணக்கம், மறுப்பின்மையாலேயே ஏற்படும் ஒப்புதல், துயருழப்பு, துன்பம், அவதி, சகிப்புத்தன்மை, பொறுதியாற்றல், (பழ.) பணிவுடைமை, கப்பற் சரக்கேற்ற இசைவுரிமை.
Sufferer
n. துன்புறுவோர், படுவோர், செயல்வகையில் ஆளாவோர், செயலாற் பாதிக்கப்படுபவர்.
Suffering
n. துன்பம், (பெ.) துன்பப்படுகிற.
Suffete
n. பண்டைக் கார்தெஜ் நகராட்சியின் முறைமன்ற நடுவருள் ஒருவர்.
Suffice
v. போதுமானதாயிரு, ஏற்ற அளவினதாயிரு, மனநிறைவு ஏற்படுத்தவதாயிரு, தேவைகளை நிறைவேற்றுவதாயிரு.
Sufficiency
n. போதிய அளவு, போதிய செல்வம், மட்டளவான சொத்துடைமை, போதிய வளம், போதிய வாய்ப்பு வளம், நிறைய மனப்பான்மை, போதிய தகுதியுடைமை, போதிய திறமையுடைமை, போதிய தகுதி, போதிய திறமை.
Sufficient
n. போதுமான அளவு, போதுமானது, தேவைக்குப் போதிய அளவு, (பெ.) போதிய, போதுமான, போதிய அளவான, தேவைக்கு ஏற்ற, போதிய எண்ணிக்கையுடைய, போதிய திறமையுள்ள.
Suffocate
v. திக்குமுக்காட்டுவி, மூச்சுத் திணற வை, மூச்சுத்திணறும் உணர்ச்சி உண்டுபண்ணு, மூச்சுவிட முடியாமற் செய், பேச முடியாமற் செய், திக்குமுக்காடு, மூச்சுத்திணறும உணர்ச்சி பெறு, மூச்சுவிடத் திணறு.
Suffocation
n. மூச்சுத்திணறல்.
Suffragan
n. சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளர், சமயத்துறை மாவட்டத் தலைவர் துணையாதரவாளர், மேனிலைச் சமயத் தலைவர்க்குத் துணையாதரவாளரான சமய மாவட்டத்தலைவர், (பெ.) சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளரான.
Suffraganship
n. சமயத்துறைத் துணையாதரவாளர் பணி, மேனிலை முதல்வர் துணையாதரவாளரான சமய மாவட்டத் தலைவர் பணி.
Suffrage
n. வாக்குரிமைச் சீட்டு, வாக்குரிமை, வாக்காளர் ஆதரவு, தேர்தல் வழியில் வாக்குரிமையாளர் இசைவளிப்பு, இசைவிணக்கம், மனமார்ந்த ஒப்புதலாதரவு, வாக்களிப்புரிமை, கருத்தாதரவு, சமய குருவுக்கு எதிர்குரலாகச் செய்யப்படும் திருக்கோயில் திருக்கூட்ட விண்ணப்ப அறிவிப்பு, இடைநேர வழிபாடு.