English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sun-cult
n. ஞாயிற்று வழிபாட்டு மரபு, ஞாயிற்று வழிபாட்டுச் சமயப் பண்பு மரபுக்கூறு.
Sun-cured
a. வெயிலிற் பதனிட்ட, வெயிலில் உணக்கிப் பக்குவப் படுத்தப்பட்ட.
Sundae
n. தேங்கனிப்பாலேடு, பழம்-கொட்டைகள் முதலியன கலந்த குளிர்பாலேடு.
Sun-dance
n. ஞாயிற்று நடனம், கதிரவனைப் போற்றி வட அமெரிக்க இந்தயர்கள் ஆடும் ஆட்டம்.
Sunday
n. ஞாயிற்றுக்கிழமை, வாரத்தின் முதுல்நாள், வார ஓய்வுநாள், வார வழிபாட்டு நாள்.
Sunday market
ஞாயிற்றங்காடி
Sunday-school
n. சமய போதனைக்காக ஞாயிறன்று நடத்தப்படும் பள்ளி.
Sunder
v. (செய்.) வேறாக்கு, பகுதிகளாகப் பிரி, துண்டி, தனித்திருக்கச் செய்.
Sundew
n. நுண்பனிச் செடி, நுண்திவலை சொட்டும் துய்களையுடைய சிறு செடி வகை.
Sun-dial
n. கதிர் மணிப்பொறி, கதிர்நிழற் கடிகை.
Sun-dog
n. கதிரவன் விளிம்பொளிப் போலிவட்டம்.
Sundown
n. கதிரவன் மறைவு, சூரியாத்தமனம்.
Sundowner
n. ஊர்சுற்றி, அந்தி உணவுக்கு மட்டும் வருந் தொழிலாளி, அந்திப்பொழுது அருந்துங் குடிவகை.
Sun-dried
a. வெயிலில் உலர்ந்த, வெயிலில் உணக்கப்பெற்ற.
Sundries
n. pl. எஞ்சியவை, சில்லறை உருப்படிகள், தனியாகக் குறிப்பிட வேண்டியிராத துணைப்பொருள்கள்.
Sun-drops
n. அமெரிக்க அந்திமந்தாரப் பூவகை.
Sundry
n. ஆஸ்திரேலிய மரப்பந்தாட்டத்தில் நேரடிப்பந்தெறியின்றிப் பெறப்பட்ட கெலப்புப்புள்ளி, (பெ.) சில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில, பல்வகைப்பட்ட.
Sunffers
n. pl. மெழுகுதிரி விளக்கின் கரள்திரிக்கரிக் கத்தரிப்புக்கருவி.
Sunfish
n. பருதிமீன், வட்டவடிவப் பெருமீன் வகை.
Sunflower
n. சூரியகாந்தி வகை.