English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Supercelestial
a. வான் கடந்த, வானத்திற்கு மேற்பட்ட, மட்டுமீறிய புனிதத்தன்மையுடைய, திப்பியங்கடந்த.
Supercharge
-1 n. அளவு மீறிய நிரப்பீடு, மட்டுமீறிய சுமை, மிகைக் கட்டணம், (கட்.) மிகைப் பொறிப்பு.
Supercharge
-2 v. மட்டுமீறி நிரப்பு, அளவுமீறித் திணி, மட்டின்றி ஏற்று, அளவு கடந்து சுமத்து, எல்லையின்றி அழுத்த மிகுதிப்படுத்து, பொது அளவு கடந்த கட்டணம் ஏற்று, (கட்.) மிகையாகப் பொறிப்பிடு.
Supercharger
n. உந்துகலம் விமான முதலியவற்றின் வகையில் மீவிசைக் காற்றடைப்புக் குழாய், உள்வெப்பாலை மீவிசை அழுத்தமூட்டுவதற்கான அமைவு.
Supercilary
a. (உள்.,வில.) புருவங்கள் சார்ந்த, கண்ணுக்கு மேலேயுள்ள.
Supercilious
a. இறுமாப்பான, ஆணவம்பிடித்த, மேம்பட்டவரெனச் செருக்கிக் கொள்கிற, அசட்டையாய் நடந்து கொள்கிற, அவமதிப்பாக நடத்துகிற.
Superciliousness
n. ஏக்கழுத்தம், அகம்பாவம்.
Supercivilized
a. மட்டுமீறிய நாகரிகப் புறப்பகட்டு வாய்ந்த.
Superclass
n. (வில., தாவ.) பெரும்படி வகுப்பு, ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை உட்கொண்ட வகுப்பு.
Supercolumnar
a. (க-க) தம்ப மேற்கட்டான, தூண்களின் வாமிசைக்கு மேலே கட்டப்பட்ட.
Supercolumniation
n. அடுக்கியல் அமைதிக் கட்டுமானம், ஓர் ஒழுங்கமைதியின் மீது பிறிதோர் ஒழுங்கமைதியாக அமைந்த கட்டடக் கலை.
Supercool
v. நீர்ம வகையில் உறையாது உறைநிலைக்குக் கீழே குளிர வை.
Superdreadnought
n. மீ வலிமைப் போர்க்கப்பல்.
Superego
n. மேல்மனம், கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்துக் கட்டுப்படுத்துந் தன்மை வாய்ந்த மேல்மனக் கூறு.
Superelevation
n. குறுக்கு வாட்டம், தண்டவாள வளைவுப்புற உயர்வு.
Supereminence
n. மீ மேம்பாடு, மிசை மேல்தரம்.
Supereminent
a. தேவைக்கு மேற்பட்ட மிகு மேம்பாடுடைய, மட்டுமீறிய உயர்தரமுடைய.
Supererogation
n. மீச்செயல், தேவைக்கு மேற்பட்ட செல், மீநலச் செயல், செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல, மீமிகை, அவசியமின்மை, (இறை.) சேம வினைநலம், பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
Supererogatory
a. கடமை தாண்டிய மீநலத்தன்மையுடைய, தேவைக்கு மேற்பட்ட, தவிர்க்கக்கூடிய, மிகையான, அவசியமற்ற.
Superessential
a. உச்சநிலை முதன்மை வாய்ந்த, பொது நிலை தாண்டிய முதன்மையுடைய.