English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Superacute
a. மட்டுமீறிய நுட்பம் வாய்ந்த, அளவு மீறிய கூர்மதியுடைய, மிகைப்படக்கூரிய.
Superadd
v. மிகைப்படியாகச் சேர், மேற்கொண்டு கூட்டு.
Superadded
a. மிகைப்படியாகச் சேர்க்கப்பட்ட, அளவு மீறிக் கூடிய, மேற்கொண்டு கூட்டப்பட்ட.
Superaddition
n. மிகைப்படிச் சேர்ப்பு, மிகை.
Superaltar
n. புனித மேற்பீடம், புனிதமாக்கப்படாத பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் புனிதமாக்கப்பட்ட கற்பாளம்.
Superanal
a. குதத்திற்கு மேலுள்ள.
Superangelic
a. தேவதூது நிலைக்கும் மேம்பட்ட, மட்டுமீறிய புனிதத் தன்மையுடைய, திப்பியங் கடந்த.
Superannuate
v. பழமைப்பட்டதாக்கு, மிகப் பழமைப்பட்டுவிட்டதென்று கருது, மிகு பழமை காரணமாக ஒதுக்கித் தள்ளு, மூப்புக் காரணமாக ஒதுக்கி வை, வேலையினின்று வயது காரணமாக ஒதுக்கி விட, வேலையினின்று மூப்புக்காரணமாக விலக்குவி, ஓய்வூதியங் கொடுத்து விலகச் செய், குறைந்த தகுதியினையும் பெறாத மாணவரை நீக்கும் படி கோரு.
Superannuated
a. பழமைப்பட்டுப் போன, பழமை காரணமாகப் பயன்படுந் தகுதியற்றுப்போன, ஏலா மூப்படைந்துவிட்ட, வேலைவயது கடந்த.
Superannuation
n. பழமைப்பட்டுவிடல், பழமைப்பாடு, மிக மூப்படைவு, மிக மூப்பறிவிப்பு, மிகு மூப்புகாரணமான விலக்கீடு, மூப்போய் வளிப்பு, மூப்போய்வு உதவித்தொகை, வேலைவயது கடத்தல், ஒய்வுகாலப்படி.
Superaqueous
a. நீருக்கு மேலேயுள்ள, நீர்ப்பரப்புக்குக் கீழப்படாத, நீர்ப்பரப்பின் மீதான.
Superb
a. உயர்மதிப்பு வாய்ந்த, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற, சிறந்ததான, தனிவீறார்ந்த, முதல்தரமான, மிக மேம்பட்ட.
Superbipartient
a. மூன்றில் இரண்டு கூறு கூடுதலான.
Superbiquintal
a. ஏழுக்கு ஐந்து என்ற தகவுப்படியான.
Superbitertial
a. ஐந்துக்கு மூன்று என்ற தகவுப்படியான.
Superbly
adv. தனி நேர்த்தியுடன், மிகச் சிறப்பாக, முதல் தரமாக.
Supercalender
v. தாள்-துணி வகையில் மெருகுப்பெட்டியிட்டு மட்டுமீறிய மெருகளி.
Supercalendered
a. துணி-தாள் வகையில் மட்டுமீறி மெருகிடப்பட்ட, உருளை இயந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் பெரிதும் மழமழப்பாக்கப்பட்ட.
Supercanopy
n. மேல்விதானம், புறநிலை மேற்கட்டி.
Supercargo
n. வாணிகக் கப்பற் சரக்கு விற்பனைப் பொறுப்பு மேலாள்.