English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Superintendence
n. மேற்பார்வை, கண்காணிப்பு, மேலாண்மை, செயல் மேலாட்சி.
Superintendency
n. கண்காணிப்பாளர்பணி, கண்காணிப்பாளர் ஆட்சி வட்டகை.
Superintendent
n. கண்காணிப்பாளர், காவல்துறை மீமேலர்.
Superior
n. மேல்நிலையர், மேம்பட்ட நிலையுடையவர், தகுதி மேம்பட்டவர், மேலவர், திருமட முதலவர், கன்னித்துறவியர் திருமடத்தலைவர், (பெ.) மேம்பட்ட, மேனிலைசார்ந்த, மேல் தகுதியுடைய, உயர்தரமான, மேல்தளஞ் சார்ந்த, உயரிடஞ்சார்ந்த, பண்புயர்ந்த, வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய, பொதுநிலை கடந்த, வழக்குத்துக்கு மேம்பட்ட, மட்டுநிலை தாண்டிய, சராசரி நிலைகடநத, (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள, ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய, மேம்பட்ட தொடர்புடைய, உயர் வகை சார்ந்த, உயர் வகுப்பினரான, மதிப்பேறிய, உயர்மதிப்பு வாய்ந்த, உயர்பாவனையுடைய, உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற, வீறாப்பாக நடந்து கொள்கிற, பணிந்து போகாத, ஆட்படாத, விட்டுக்கொடுக்காத, சலுகைகள் காட்டாத, கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத, உறுப்பு வல் மேற்கவிவான, இறகு வகையில் சிறிது மேன்மடிவான, (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட, (அச்.) வரைமேலான.
Superioress,n. fem.
கன்னிமாடத் தலைவி, கன்னித்துறவியர் மடத்துத் தலைவி.
Superiority
n. மேம்பாடு, உயர்வு.
Superiorly
adv. மேலிடத்ததாக, மேம்பட்டதாக.
Superjacent
a. அடுத்து மேற்கிடக்கிற.
Superlative
n. (இலக்.) பெயரடை வல் ஏற்றுயர்படி, (இலக்.) பெயரடை வினைஅடை ஆகியவற்றின் ஏற்றுயர்படி வடிவம், (இலக்.) ஏற்றுயர்படியிலுள்ள சொல், உச்ச உயர்நிலை, உச்ச உயர்தரம், (பெ.) மிகவுயர்ந்த தரஞ் சார்ந்த.
Superlunar, superlunary
a. இவ்வுலகத்திற்குரியதல்லாத, உலகியலுக்கு மேம்பட்ட.
Superman
n. மீமனிதர், மனித எல்லைகடந்த குறிக்கோட்பண்பு நிறைவாளர், தேவநிலையாளர்.
Supermedial
a. நடுத்தரத்திற்கு மேற்பட்ட.
Supermolecule
n. அணுத்திரளை, அணுத்திரளாகச் செயற்படும் அணுத்திரளிணைவு.
Supermundane
a. உலகியற் செய்திகளுக்கு அப்பாற்பட்ட.
Supernaculum
n. சிறப்புயர் இன்தேறல், இன்தேறல் நிறைகலம், (வினையடை.) இறுதித்துளிவரை, முடிவுவரை, முழுதாக.
Supernal
a. (செய்.) வானுலகத்திற்குரிய, மேலுலகுக்குரிய, வானவௌத சார்ந்த, தெய்வத்தன்மையுடைய, மேன்மையான, விழுமிய.
Supernatant
a. புறப்பரப்பில் மிதக்கிற.
Supernatation
n. புறப்பரப்புமிதப்பு, நீர்மநெகிழ்ம மேல்நிலை, தளமிதப்பு.
Supernatural
n. இயல்நிலை கடந்தவர், தேவர், தெய்வம், தெய்வ நிலையினர், உலோகதீதம், இயற்கை மீறிய பொருள், (பெ.) இயற்கை கடந்த, இயற்கைமுறைக்குளடங்காத, இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க, தெய்விக அருநிகழ்வான, தெய்விக ஆற்றல் சுட்டிய, ஆவித்தொடர்புடைய.
Supernaturalism
n. இயற்கை கடந்த நிகழ்வு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை.