English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Supernaturalist
n. இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையுள்ளவர்.
Supernaturalize
v. இயல்மீறிய நிலைப்படுத்து, இயல்கடந்த அருநிகழ்வாக்கு.
Supernormal
a. பொதுநிலை கடந்த, பொதுக்காட்சிக்கு அப்பாற்பட்ட, அருநிலையான, இயல்நிலைக்கு அப்பாற்பட்ட படிவமுடைய, இயல்நிலைக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள, பொதுமீறிய அளவுள்ள, பொதுமீறிய பண்புடைய.
Supernumerary
n. மிகையாள், மிகைப்பொருள், சில்லறை வேலைகளுக்கென வைத்துக்கொள்ளப்படும் மிகுதிப்படியான ஆள், பேசவேண்டியிராத நடிகர், (பெ.) மிகையான, குறிப்பிட்ட-வழக்கமான-வேண்டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட.
Superoctave
n. (இசை.) மீசுரக்கட்டை, முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை.
Superorder
n. (உயி.) உயர்தரக் குழுமம், இனக் குழுமத்திற்கும் வகுப்பிற்கும் இடைப்பட்ட தரம்.
Superordinary
a. பொதுமுறைக்கு மேற்பட்ட, பொது நிலைக்கு மேம்பட்ட.
Superordinate
n. மேம்பட்ட பதவித் தரத்தினர், மேம்பட்ட தரத்தினர், (பெ.) பதவித்தர மேம்பட்ட, (அள.) வாசக இனமுழுமைத்தொடர்புடைய, (வினை.) மேம்பட்ட தரத்திரனராக்கு, மேம்பட்ட தரத்ததாக்கு.
Superordination
n. (அள.) வாசக வகையில் இனமுழுமைத்தொடர்பு.
Superorganic
a. உடலமைதி கடந்த, உள இயல் சார்ந்த, மேலான அமைப்பாண்மைக்குரிய, மன்பதைச்சார்பான.
Superovulation
n. கருவணுப்பெருக்கம், இனக்கூற்றுசியீட்டினால் பசுவுக்கு உண்டாகும் செயற்கைக் கருநுண்மப் பெருக்கம்.
Superparasite
n. (உயி.) ஒட்டொட்டு, ஒட்டுயிரின் ஒட்டுயிர்.
Superphosphate
n. எரியக்காடி பெரிதுங்கலந்துள்ள எரியகி.
Superphysical
a. மீப்பொருளியலான, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட, பருப்பொருள்நிலைக்கு மேம்பட்டதான.
Superpose
v. மேற்கிடத்து, மேல்வைத்திணைவி, ஒருங்கியைவி, மீதாகச் செங்குத்தாக்கு.
Superposed
a. மேற்கிடத்தப்பெற்ற, மேல்வைக்கப்பட்ட, மேலொருங்கியைந்த.
Superposition
n. மேற்கிடை, மேல்வைப்புநிலை.
Superquadripartient, superquedriquintal
a. (கண்.) ஹீக்கு 5 என்னுந் தகவுப்படியுள்ள.
Superrealism
n. மட்டுமீறிய நேரியல் கலை வாய்மைப்பாடு.
Superroyal
a. தாள் பருமானத்தில் மீமேம்பாட்டளவுடைய, எழுதுதாள் வகையில் 1ஹீ 1க்ஷீ4 க்கு 2ஹ் 1க்ஷீ2 அங்குல அளவுடைய, அச்சுத்தாள் வகையில் 20 1க்ஷீ2 க்கு 2ஹ் 1க்ஷீ2 அங்குல அளவுடைய.