English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Surmise
n. ஊக ஐயுறவு ஊகம், ஊக மதிப்பு, பொருளின் இயல்புபற்றிய ஊகம், ஊக உணர்வு, பொருளின் இருப்புப் பற்றிய ஊகம், (வினை.) ஊகித்து ஐயுறு, ஐயுற்றுஊகி, உய்த்துணர், ஊக மதிப்பிடு, முன்னரே ஊகி, ஊகித்து முற்குறிப்பிட முயல்.
Surmount
v. முகடேறு, உச்சிக்கண் செல், அடுத்துர்ந்து வெல்.
Surmountable
a. ஏறிக் கடக்கத் தக்க, கடத்தற்குரிய, எதிர்த்துச் சமாளிக்கத் தக்க, வெல்லற்குரிய, அடக்கி ஆள்வதற்குரிய.
Surmullet
n. செந்நிறக் கடல்மீன் வகை.
Surname
n. குடிப்பெயர், குடும்பப் பெயர், வேறு பெயர், பட்டப்பெயர், சிறப்புப் பெயர், (வினை.) சிறப்புப்பெயர் கொடு, குடிப்பெயரிட்டு வழங்கு, குடும்பப் பெயர் கொடு.
Surpass
v. மேம்படு, செயலில் விஞ்சு, பண்பில் மேற்பட்டிரு.
Surpassing
a. விஞ்சிய, மிக மேற்பட்ட, தலைசிறந்த.
Surpassingly
adv. தலைசிறந்த நிலையில்.
Surplice
n. குருமார் வழிபாட்டுநேர வெண்ணிறத் தளர்மேலாடை அங்கி.
Surplus
n. மிகை, நிதியாண்டின் செலவிற்கு மேற்பட்ட வருமான மிகுதி, தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு.
Surplusage
n. விஞ்சு மிகை.
Surprisal
n. திடீர்ச்செயல், அதிரடிச் செயல்.
Surprise
n. எதிர்பாரா அதிர்ச்சி, திடீர் வியப்பு, திடுக்கீடு, மலைப்பு, திடீர்த் திருப்பம், எதிர்பாரா நிகழ்ச்சி, அதிர்ச்சி தருஞ் செய்தி, (வினை.) திடுமெனத் தாக்கு, திடுமெனக் கைப்பற்று, திடீரென வந்துறு, காப்பற்ற நிலையில் வந்துபற்று, வியப்பூட்டு, மலைப்பூட்டு, திகிலுட்டு, திகைக்க வை, எதிர்பார்த்ததற்கு மாறாக இயங்கு, வியப்பளி, எதிர்பாராது சிக்கவைத்துவிடு.
Surprised
a. அதிர்ச்சியுற்ற.
Surprisedly
adv. அதிர்ச்சியுற்று, கலக்கமுற்று.
Surprising
a. திடும் வியப்பூட்டுகிற, எதிர்பாரா அதிர்ச்சியூட்டுகிற, திடீரடியான.
Surprisingly
adv. திடீரடியாக.
Surra
n. வெப்பமண்டலக் குருதிக்குறை நோய் வகை.
Surrealism
n. வரம்பில் அகவாய்மைக் கோட்பாட, அடிமன இயல்பு காட்டக் கனவின் தன்மையொத்த தொடர்பிணைவுக் காட்சிகளைக் காட்ட முயன்ற 20ஆம் நுற்றாண்டுக் கலை இலக்கியப் பாணி.
Surrebut
v. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு.