English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Surcingle
n. குதிரைச்சேண வரிப்பட்டை, ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை, (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு, கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு.
Surcoat
n. கவசமேலங்கி, கவசத்தின் மேல் அணியும் நெகிழ் மேலங்கி.
Surculose, surculous
(தாவ.) பக்கக் கன்று வெடிக்கிற, கிளை முளைகளை உண்டுபண்ணுகிற.
Surd
n. (கண.) முருட்டெண், பகுபடா எண், இடக்குப் பின்னம், பதின் கூற்றில் தீராக் கீழ்வாய், (ஒலி.) வன்கணஒலி, அதிர்வற்ற வல்லோசை மெய், (பெ.) (கண.) எண்வகையில் முருடான, கீழ்வாய் வகையில் இடக்குப் பின்னமான.
Sure
a. ஐயுறவு இல்லாத, உறுதி கொண்ட, கட்டாயம் எதிர்பார்க்கிற, உறுதியாக நம்புகிற, ஐயுறவுக் கிடனற்ற, உறுதியான, நம்பத்தக்க, தவறாத, பிழைபட்டுப் போகாத, கட்டாயமான, மெய்யான, நிலவர மெய்ம்மையுடைய, நடைமுறை உறுதி வாயந்த, திடமான, ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய, (வினையடை.) கட்டாயமாக, உறுதியாக, மெய்யாகவே.
Sure-footed
a. தவறாக அடியெடுத்து வைக்காத, தடுமாறாத, செயல்திட்பம் மிக்க.
Surely
adv. உறுதியாய், கட்டாயமாய், நிச்சயமாக, ஐயமின்றி, நடைமுறை பிழையா நிலையில்.
Surety
n. கட்டாயநிலை, உறுதி, பிணையம், பிணைப்பொருள், உத்தரவாதம், பிணை ஆள்.
Surf
n. அலை, நுரை நீர்த்தடம், ஓத நீர்த்திரை, கடல்நுரைத்திரள், பொங்கோதம், அலை பொங்குங் கடற்கரை நீர்ப்பரப்பு.
Surface
n. பரப்பு, மேற்பரப்பு, மேலீடான தளப்பரப்பு, (வடி.) நீள அகலப் பரப்புடைய முகப்புத்தளம், (வினை.) தாள் முதலியவற்றில் சிறப்பு மேற்பரப்பு அமை, பரப்புமெருகு முற்றுவி, நீர்முழ்கிக் கப்பல் வகையில் ற்பரப்பிற்கு வா.
Surface-colour
n. முனைப் பச்சுமை நிறம், உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சில் பயன்படும் மைக்குரிய நிறம்.
Surface-craft
n. அலைமேவு கலம், நீர்முழ்கியல்லாத கப்பல் தொகுதி.
Surfaced
a. பரப்பையுடைய, மெருகிட்ட.
Surface-mail
n. நிலவழி அஞ்சல்.
Surface-man
n. இருப்புப்பாதை ஒழுங்கு காப்பாளர்.
Surface-printing
n. முனைப்பச்சு, உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சுமுறை.
Surfacer
n. தள மெருகிடுபவர், தள மெருகிடுவது, தளமெருகீட்டுக் கருவி.
Surface-ship
n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல்.
Surface-tension
n. நீர்ம அலைவியக்க ஆற்றல், நீர்ப்பரப்பின் மீது காணப்படும் நீர்ம நெகிழ்வமுக்க ஆற்றல்.
Surface-vessel
n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல்.