English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sware
v. பழங்கால வழக்கில் 'சிவியர்' என்பதன் இறந்தகாலம்.
Swarf
n. மரச்சிம்பு, மரச்சீவல், உலோகச் சிம்பு செத்தை.
Swarm
-1 n. வண்டின் மொய்திரள், பறவைத் தொகுதி, விலங்கின் தொகுதி, தேனீக்கூட்டம், (வினை.) மொய், திரளு, அடர்த்தியாயிரு, திரளாக இயங்கு, தேனீக்கள் வகையில் குடிபுறஞ் செல்வதற்காக ஒன்று கூடு, கூட்டமாகத் திரள், பெரும் எண்ணிக்கையாயிரு, இடவகையில் நெருக்கமாயிருக்கப் பெறு.
Swarm
-2 v. பற்றியேறு, கயிறு-மரம்-கழி முதலியவற்றின் மீது ஏறு,மரம் ஏறுவது போல் பற்றிக்கொண்டு கயிற்றில் ஏறு.
Swarm-cell, swarmspore
n. சிறகல்லிச்சிதல், அணு உயர்ச்சிதல்.
Swart
a. (பழ.) கருநிறங்கொண்ட.
Swarthy
a. கரிய, கருநிறங்கொண்ட.
Swash
n. அலம்பொலி, நீர்மோதி அலம்பும் ஓசை, வளைவுக்கோடு, (வினை.) கடுமையாக மோது, தெறி.
Swashbuckler
n. முரடன், எளியோரைத் துன்புறுத்துபவன், அடியாள், கூலிக்கு அடிதடி செய்யும் போக்கிரி.
Swash-plate
n. ஊசலியைவுச் சுழற் பல்வட்டு, முனையை மேலும் கீழுமாக இயங்குவிக்கும் பற்சக்கரச் சாய்வியைவுவட்டு.
Swastika
n. மங்கலக்குறி, சுவஸ்திகை.
Swath
n. புல் அரிதாள், அறுவடை அரிதாள் கட்டை, புல்தளக்கட்டை, ஒருமுறை வெட்டிய புல்லின் அடிக்கட்டைத் தளம்.
Swathe
n. புண்கட்டுத் துணி, கட்டுத்துணி மடி, (வினை.) கட்டுத்துணியால் இறுக்கிக்கட்ட, பல ஆடைகளால் அல்லது துணிகளால் சுற்றிப் போர்த்து.
Sway
n. அசைவு, ஊசலாட்டம், தள்ளாட்டம், கையாட்சி, அரசியல் ஆதிக்கம், (வினை.) தள்ளாடு, அசைந்தாடு, ஊசலாடு, அப்படியும் இப்படியுமாக ஆடு, சாய்ந்தாடு, அலையாடு, ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை, தடுமாறு, தயங்கு, ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு, ஊசலாட்டு, அங்குமிங்கும் ஆடச்செய், அசைவினை ஒழுங்குபடுத்து, பிடித்தாட்டு, ஆட்சி செய், செல்வாக்குப் பெற்றிரு, செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
Swayed, sway-backed
a. குதிரை வகையில் இயற்கைக்கு மாறாகக் குழிந்த முதுகுடைய.
Swear
n. சூளுரை, (வினை.) ஆணையிடு, ஆணையிட்டுக்கூறு, உறுதிகூறு, உறுதியாகக் கூறு, ஆணைநேர்ந்து வை, ஆணையிடுவி.