English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Swellish
a. ஆடை அணிவதிற் பகட்டும் பெருமையுங் கொண்ட, செயற்கை ஆடம்பரம் மேற்கொள்கிற, போலித்தனமான, பகட்டித்திரிகிற.
Swell-organ
n. மிதிகட்டையால் ஒலியொழுக்கு செய்யவல்ல இசை மேள வகை.
Swell-pedal
n. இசைப்பெட்டியில் ஒலியை ஒழுங்குபடுத்தும் மிதியடிக்கட்டை.
Swell-rule
n. (அசு.) நடுமணிக்கோடு, நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.
Swelter
n. புழுக்க மிக்க வானிலை, வெப்பமும் அழுத்தமும் மிக்க காற்றுமண்டலம், (வினை.) புழுங்கு, புழுக்கத்தால் அயர்வுறு, புழுங்கித் தளர்வுறு, புழுங்கி அளிவுறு.
Sweltering
a. புழுங்குகிற, புழுக்கமான, புழுக்கமிக்க.
Swept
-1 a. தூர்த்துப் பெருக்கப்பட்ட, துடைத்துத் தூய்மையாக்கப்பட்ட.
Swept
-2 v. 'ஸ்வீப்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Sweptback
a. பின்னேந்தலான, விமான இறக்கைகளின் புறப்பகுதி வகையில் பின்னோக்கி வளைந்த.
Sweptwing
a. பினனேந்து இறக்கையுடைய, விமான வகையில் புறப்பகுதி பின்னோக்கி வளைந்த இறக்கைகளையுடைய.
Swerve
n. விலகீடு, நெறிபிறழ்வு, நெறிபிறழ்வுச் செயல், நெறிபிறழ்வுக்குரிய செய்தி, திசைதிரிவு, போக்குக்குலைவு, நிலை உலைவு, பிறழ்வியக்கம், பந்தின் பிறழ்வெறிவு, பிறழ்வெறிவுப் பந்து, (வினை.) விலகிச் செல், பிறழ்வுறு, நெறிதிறம்பு, நிலை திரிவுறு, திசை-தடம் பிறழ்வுறு, வெட்டித்திரும்பு, அலைவுறு, தடுமாற்றங்கொள், வழிவிலகுவி, நெறிபிறழ்வுறு, சாய்ந்தொதுங்குவி வெட்டித் திரும்புவி, அந்தரத்தில் போக்குப் பிறழ்வுறப்பந்தெறி, சாய்ந்தொதுங்கு.
Swift
n. நீள்சிறைப் பறவை வகை, பல்லி வகை, புறாவகை, திரிவட்டம், நுல் சுற்றுவதற்குரிய சுழல் வட்டு, (பெ.) விரைவான, வேகமான, திடுமென்ற, மின்னீடான, திடீரெனவந்து திடீரெனச் செல்கிற, உடனடியான, விரைந்து செயல்படுகிற, செயல் திறத்தில் துடிப்பு மிக்க, சொல் திறத்தில் துடியான, (செய்.) சுணங்காத, தாமதமற்ற, (வினையடை.) விரைவாக, உடனடியாக, தமாதமின்றி.
Swift-footed
a. விரைந்த நடையுடைய, வேகமாகச் செல்லக்கூடிய.
Swift-handed
a. வேகமாக எழுதக்கூடிய, விரைந்து செயலாற்றக்கூடிய.
Swift-winged
a. வேகமாகப் பறக்கக்கூடிய, விரைந்து செல்லக்கூடிய.
Swig
n. மிடற்றளவு மது, (வினை.) குடித்து வாழ்த்து.
Swill
n. கீழ்த்தரக்குடிவகை, பன்றித் தொட்டி, கழுவு நீர், கழுவுகை, ஒரு தடவைக் குடிப்பு, (வினை.) அலம்பு, நீராற் கழுவு, மீதாக நீரூற்று, விசையுடன் நீர்பீற்றியடி, பேராவலுடன் பருகு.
Swim
n. நீச்சல், நீத்து, மிதப்பு, மீன்மடு, ஆற்றில் மீன்மிகுதி ஊடாடும் பகுதி, செயலோட்ட மையம், மையநடைமுறைப்போக்கு, (அரு.) மீன் உள்வளிப்பை, (வினை.) நீந்து, நீர்மத்தின் மேற்பரப்பில் மித, நீந்திக்கட, நீச்சல் போட்டியிற் கலந்து கொள், குதிரை-நாய், முதலியவற்றை நீந்திக் கடக்கச் சய், விரைவாகச் செல், நழுவியக்கமாக விரைந்து செல், தலைசுற்றப்பெறு, வௌளக்காடாக்கு, பொங்கிப் பெருகு, பொங்கி வழி, ததும்பி நில்.
Swimmeret
n. நீந்தும் ஆற்றலுடைய தோட்டு உயிரிகளின் கால்.
Swimming
n. நீச்சல், தலைசுற்றல், மிதப்பு, (பெ.) நீந்துகிற, நீந்துவதற்குதவுகிற.