English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Swum
v. 'ஸ்வீம்' என்பதன் முற்றெச்ச வடிவம்.
Swung
v. 'ஸ்வீங்க்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Sybarite
n. சிபாரிஸ் என்ற இத்தாலி நாட்டுப்பண்டைக் கிரேக்க குடியேற்ற நகரத்தார், ஊதாரிச் செலவினர், சொகுசு வாழ்வினர்.
Sybaritic
a. சொகுசு வாழ்வுடைய.
Sybaritism
n. ஊதாரி வாழ்வுக் கொள்கை.
Sybdeacon
n. துணைநிலைக் கோயிற்குரு.
Sycamine
n. (விவி.) கரு முசுக்கட்டை மரம்.
Sycamore
n. அத்தியின மரவகை
Sycee
n. சீன முத்திரை வௌளிக்கட்டி, சீன நாட்டில் நிறுத்து நாணயம்போல வழங்கப்ட்ட மாற்று முத்திரையிடப்பட்ட வௌளிப்பாளம்.
Sychnocarpous
a. (தாவ.) பலமுறை கனி தருகிற, வற்றோவளந்தருகிற.
Syconium
n. (தாவ.) அத்தியினக் காய், பல்விதைகளாக முதிர்வுறும் முதிராச் சதைத்தோடு.
Sycophancy
n. அண்டிப்பிழைப்பு, ஒட்டி வாழ்வு, கொத்தடிமைத்தனம்.
Sycophant
n. அண்டிப் பிழைப்போர், கெஞ்சிப் பிழைப்பவர், கொத்தடிமையர்.
Sycophantic
a. அண்டிப் பிழைக்கிற, ஒட்டி வாழ்கிற, கெஞ்சிப் பிழைக்கிற, அடிமைத்தள மிக்க.
Sycosis
n. கத்திப் பரு, தாடைத் தோல்நோய்.
Syenite
n. களிமப் பாறை வகை.
Syllabary
n. அசையெழுத்து முறை, மொழிகளில் எழுத்துப் போலப்பயன்படும் அசைக் குறியீட்டு முறை.
Syllabic
a. அசை சார்ந்த,அசைக்குரிய, அசை வடிவான, அசைபோன்ற, அசைமுறையான, முழுஅசைக்குறியீடான, அசை ஒலியுடைய, அசை அசையாக ஒலிக்கிற.
Syllabication
n. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு.