English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sedulousness
n. ஆள்விளையுடைமை, தளரா ஊக்கம், இடைவிடா முயற்சி, அயரா விழிப்பு.
See
-1 n. நாட்டு உச்ச உயர் மதகுருவின் ஆட்சியெல்லை, மாவட்டச் சமயத்தலைவர் பதவி, மதிப்புவாய்ந்த உயர்பதவி, தவிசு, மாவட்டச் சமயத்தலைவர் இருக்கை.
See
-2 v. பார், புலங்களால் உணர், காணும் ஆற்றல் பெற்றிரு, கண்கூடாகப் பார், பார்த்தறி, கண்டுணர், காட்சி மூலம் உணர், தேடிப்பார், காட்சியாகக் காண். காணப்பெறு, காட்சிப்பெறு, மனத்தால் உவ்ர், உள்ளத்தில் உருவகப்படுத்திக்காண், நினை, கருது, ஆய்ந்துணர், மதித்துணர், உறுப
See daylight
ஒருவகையில் தீர்வுகாண், ஒரு மட்டில் விளக்கம் காண், காட்சிப்பட வந்தமை.
See-bright
n. காய்கறித் தோட்டப் பூண்டுவகை.
Seed
n. வித்து, முளைவிதை, விதை, கனிவுட்குரு, கொட்டை, விதைத்தொகுதி, கருமுளை, மீன் முட்டைக் குவை, வித்தாக முதிரும் நிலை, விதை உட்கொண்டநிலை, வித்தியநிலம், புல்வகைகளின் விதைப்பயிர், விதைபோன்ற பொருள், சிறுபொருள், விதைபோன்ற பொருள் தொகுதி, கண்ணாடி அகக்குமிழி, விதைப்படிகம், மணி உருவாக்கமூட்டும் படிகம், கான்முளை, வழித்தோன்றல், வழிமரபு, சந்ததி, வழி மரபினம், இனம், மூலமுதல், மூலகாரணம், தொடக்கம், மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு, விதை விளைவி, விதைத்தல் செய், விதைகள் போல் தூவு, கனிகளினின்றும் விதையெடு, மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி, இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை.
Seed-cake
n. முழுவிதைப் பச்சி, முழு விதையுள்ளிட்ட சுவைப் பண்ணிய வகை.
Seed-coral
n. சிறு மணிப்பவளம்.
Seed-corn
n. விதைக் கூலம், பயிர்மணி விதை.
Seeddrill
n. விதை வரிசை இயந்திரம், (வினை.) சால்வரி விதைப்புச்செய்.
Seeder
n. சால்வரி விதையமைவு, பழத்திலிருந்து விதையெடுக்கும் அமைவு.
Seed-field
n. விதைப்பண்ணை, நாற்றங்கால்.
Seed-fish
n. சினைமீன், முட்டையிடும் நிலையில் உள்ள மீன்.
Seediness
n. விதை நிரம்பிய நிலை, நோய் நலிவுற்ற தன்மை, கந்தல் நிலை, பழத்தேறல் வகையில் களைகளால் ஏற்படுவதாகக் கூறப்படும் தனிச்சுவையுடைமை, கண்ணாடி வகையில் உட்குமிழியுடைமை, மீன் வகையில் நிறைசினை நில், சணல் வகையில் விதைநீக்கா நிலை.
Seeding
n. விதை விளைவு, விதைமுதிர்வு, விதைப்பருவ விரைவளர்ச்சி, அருவருப்பான வளம், விதையகற்றுதல், விதைப்பு, (பெ.) விதைவிளைவிற்குரிய, விதைப்பருவத்திற்குரிய, விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய, விதை அகற்றுகிற, விதைக்கிற.
Seeding-machine
n. சால்விதைப்பொறி, சால்வரி விதைப்பொறி.
Seeding-plough
n. சால்வரி விதை கலப்பை.
Seed-leaf
n. முளையிலை, விதைப்பருப்பின் வளர் உருவான முதல் இலை.
Seedless
a. விதையற்ற, சந்ததியற்ற.
Seedling
n. இளந்தை, விதைக்கன்று, வெட்டிவைக்கப்படாது விதையினின்று வளர்ந்த இளஞ்செடி, இளமரம், நாற்று, இளம்பயிர்.