English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Segregate
a. தனிப்படுத்தப்பட்ட, பிரித்துவைக்கப்பட்ட, (வில்.) தனி முழுமையான, கொத்திணைவற்ற, (வினை.) தனியாக ஒதுக்கு, தனிமைப்படுத்து, கூட்டிணைவிலிருந்து, பிரித்துவை, (இய.) மணியுருவாக்க வகையில் பொதுப்பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடியுருவாகு.
Seiche
n. வளிமாற்ற அசைவியக்கம், வளி அழுத்தமாறுதல் காரணமாக ஏரிநீரில் ஏற்படும் அசைவாட்டம்.
Seid
n. இஸ்லாமியரிடையே நபிநாயகத்தின் மகள் வழி மரபுக் குழுவினர்.
Seidlitz powder
n. மல இளக்க மருந்துத்தூள் வகை.
Seigneur, seignior
பண்ணைத்தலைவர், பெருமகன்.
Seigniorage
n. பண்ணை முதல்வர் தனியுரிமைக்கூறு, மேலாண்மைக்கூறு, தங்கச்சுரங்கத்தில் பண்ணை மேல்வளர்க்குரிய ஊதியப்பங்கு, மன்னர் காணி, அரசர் சிறப்புரிமைப் பங்கு, கம்பட்ட சாலைக்காக வாங்கும் கட்டித் தங்கத்தில் விழுக்காடாகக் கொள்ளும் முடியுரிமை கூறு.
Seigniorial
a. பண்ணைத் தலைவருக்குரிய, பெருமகனுக்குரிய.
Seigniory
n. பண்ணைத் தலைமை, மேலாண்மைத் தனியுரிமை,பண்ணை முதல்வர் ஆட்சிப்பரப்பு எல்லை, இடைநிலைக்கால இத்தாலிய நகரக் குடியரசின் நகராட்சி அவை.
Seine
n. பார வலை, மேலே மிதவைகளையும் அடி நுனியில் பாரங்களையும் உடைய பெரிய மீன்வலை, (வினை.) பார வீச்சிழுப்பு வலைகொண்டு மீன்பிடி, பார வீச்சிழுப்பு வலை வீசு.
Seine-gang
n. பார வலை வீசுவோர் குழு.
Seine-needle
n. பார வலை பின்னும் ஊசி.
Seiner
n. பார வலை வீசுபவர்.
Seine-roller
n. பார வலை சுற்றி வைக்கும் உருளை.
Seise
v. (சட்.) உடைமையாகக் கொள்ளுவி, உடைமை வழங்கு.
Seismal, seismic
நிலநடுக்கஞ் சார்ந்த.
Seismicity
n. நிலநடுக்கம் ஏற்படும் நிலை, அடிக்கடி நிலவதிர்ச்சி எழக்கூடிய நிலை.
Seismism
n. நிலநடுக்க நிகழ்ச்சி.
Seismogram
n. நிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு.
Seismograph
n. நிலநடுக்கக் கருவி.