English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Selachian
n. சுறா-நாய்-மீன் உள்ளிட்ட மீன் இனவகை, (பெ.) சுறா உள்ளிட்ட மீனினஞ் சார்ந்த.
Seladang
n. மலாய் நாட்டுக் காட்டெருது வகை, கவிந்து தொங்கும், மூக்கினையுடைய மலாய் நாட்டு விலங்கு வகை.
Selamilk
n. (துரு.) முன்கூடம், இஸ்லாமியரின் வீட்டில் விருந்தினர் வரவேற்கப்படும் ஆடவர் பகுதி.
Seldom
adv. மிக அருகலாக, அபூர்வமாக.
Select
a. தேர்ந்தெடுக்கப்பெற்ற, சிறந்த, தனித்தன்மைகள் வாய்ந்த, சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள, (வினை.) தெரிந்தெடு, தேர்ந்தெடு.
Select all
அனைத்தும் தேர்ந்தெடு
Selected
a. தேர்ந்தெடுக்கப்பட்ட.
Selection
n. தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, (உயி.) இயற்கையின் இயல் தேர்வுமுறை.
Selective
a. தெரிந்தெடுப்புச் சார்ந்த, தெரிந்தெடுப்பிற்குரிய, தெரிந்தெடுப்புப் பண்புடைய, தெரிந்திருக்கும் பாங்குடைய, தெரிந்தெடுக்கிற, தெரிந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்துகிற, வேறுபாடுகள் கண்டறிகிற, வானொலியில் குறித்த அலையதிர்வின் மீது மட்டுமே செயலாற்றுகிற.
Selectivity
n. தேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம்.
Selectness
n. தேர்ந்தமைவு, தேர்ந்த சிறப்புடைமை.
Selector
n. தேர்ந்தெடுப்பவர்.
Selenate
n. மதிமகி, மதிமக்காடியின் காரம்.
Selene
n. மதி, திங்கட் புத்தேள்.
Selenic
a. உயர்திற இணைவில் மதியஞ்சார்ந்த, திங்கள் கோளுக்குரிய.
Selenious
a. (வேதி.) தாழ்தறி இணைவில் மதிமத்திற்குரிய.
Selenite
-1 n. களிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை.
Selenite(2), Selenite
-3 n. திங்கட்கோளில் வாழ்பவர்.
Selenitic
a. திங்கட்கோளுக்குரிய, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற.
Selenium
n. மதிமம், ஔதக்கற்றைக் கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளுந் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம்.