English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Semi-diameter
n. அரைவிட்டம்.
Semidiurnal
a. பன்னிரண்டுமணி நேரத்தில் முடிகிற, வான ஔதக்கோளத் தோற்ற அசைவிற்குரிய நேரத்திற் பாதியான, வான் ஔதக்கோளத்தின் தோற்ற அசைவிற்கிடைப்பட்ட வளைவில் பாதியான.
Semi-divine
a. மனித நிலைக்கும் தெய்விகநிலைக்கும் இடைப்பட்ட, அரைத் தெய்வநிலையுடைய.
Semi-dome
n. அரைக்கவிகை மாடம், செங்குத்துவெட்டுப்பகுதி போன்ற அரைக்கவிகை மோடு, கவிகை மாட அரைகுறைப் போலி, அரைகுறைக் கவிகை மாடம் போன்ற கட்டுமானப்பகுதி.
Semidomesticated
a. அரைகுறையாகப் பழக்கப்படுத்தப்பட்ட, அரைகுறையாக வீட்டுப்பழக்கமுற்ற.
Semi-double
a. (தாவ.) மலரின் புறத்துய்கள் மட்டும் பூவிதழாக மாறியுள்ள.
Semi-drying
a. எண்ணெய்களின் வகையில் காற்றுவௌதயில் முற்றிலும் உலர்ந்துவிடாமல் கெட்டிப்படுகிற.
Semi-ellipse
n. நீள்வாட்டான விட்டத்தை எல்லையாகக் கொண்ட அரைநீள் வட்டம்.
Semi-elliptical
a. நீள்விட்ட எல்லைகொண்ட அரைநீள் வட்டமான.
Semifinal
n. ஈற்றயற் போட்டி, முடிவுப் போட்டிக்கு முந்திய போட்டி.
Semifinalist
n. ஈற்றயற் போட்டியாளர், முடிவுப் போட்டிக்கு முந்திய போட்டியிற் பங்கெடுத்துக்கொள்பவர்.
Semi-fluid
n. குழை நீர்மம், (பெ.) குழை நீர்மவியலான, ஓரளவு நீர்மம் போன்ற, அரைத்திண்ம நிலையுடைய, திண்ம வகையில் சிறிது நகர்ந்து புடைபெயரும் நெகிழ்வியல்புடைய.
Semi-fused
a. அரைகுறையாக உருகிய, அரைகுறையாக உருகிக் கலந்த.
Semiglobular
a. அரைக்கோளமான, அரை உருண்டை வடிவான.
Semi-grand
n. சதுர இசைப்பேழை, செறிவடக்கமான சுரக்கட்டைகளையுடைய சதுரவடிவான இசைக்கருவி வகை, (பெ.) சதுர இசைப்பேழைக்குரிய.
Semi-imbecile
n. அரைகுறை அறிவுநிலையுடையவர்.
Semi-independent
a. அரைத் தற்சார்பான, அரைகுறைத்தன்னியலான.
Semi-infinite
a. ஒருதிசை வரையிலியான, தொடக்க இறுதி ஆகிய இரு கோடிகளில் ஒருகோடி வரம்புபட்டு மறுகோடி வரம்பிலியான.
Semi-jubilee
n. வௌளிவிழா, இருபத்தைந்தாவது ஆண்டுநிறைவு விழா.
Semi-liquid
a. அரை நீர்ம இயலான.