English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Semiparasite
n. அரை ஒட்டுயிர், பாதி உணவைத் தானே நேராகவும் பாதி பிறிதுயிர் மூலமாகவும் பெறும் உயிர்.
Semi-parasitic
a. அரை ஒட்டுயிரான.
Semiped
n. செய்யுள் அரையடி.
Semi-Pelagian
n. விதியாட்சி மதியாட்சிகளுக்கு இடைப்பட்ட கோட்பாட்டாளர், (பெ.) விதியாட்சி மதியாட்சிகளுக்கு இடைப்பட்ட கோட்பாடு சார்ந்த.
Semi-Pelagianism
n. விதியாட்சி மதியாட்சி இடைநிலைக் கோட்பாடு.
Semipellucid
a. அரைகுறையாகக் கண்ணாடிபோல் ஔதயூடுருவக்கூடிய.
Semipermeable
a. சவ்வு வகையில் கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற.
Semi-plume
n. மென்றுய் போர்த்த உறுதியான இறகு.
Semi-precious
a. கற்கள் வகையில் மதிப்பில் மணிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள.
Semiquaver
n. (இசை.) தற்கால இசைமானத்தில் வீசம் மாத்திரை.
Semite
n. விவிலிய நுல் மரபின்வெடி ஷெம் என்பவரின் மரபில் வந்தவர், செமிட்டிக் இனத்தவர், யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினஞ் சார்ந்தவர், (பெ.) விவிலியநுல் மரபின்படி ஷெம் என்பவரின் மரபில் வந்த, யூதர் அராயிரை உள்ளடக்கிய மனிதப் பேரினத்தைச் சார்ந்த.
Semitic
a. செமிட்டிக் இனஞ் சார்ந்த, யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப்பேரினஞ் சார்ந்த.
Semitone
n. (இசை.) அரைச்சுர அலகு, ஐரோப்பிய இசையில் வரும் மிகச்சிறு சுர இடைவௌத.
Semitransparent
a. அரைகுறைப் பளிங்கியலான, ஔத ஓரளவு ஊடுருவிச் செல்கிற, அரைகுறையாத் தெரிகிற.
Semitropical
a. வெப்பமண்டலங்களின் ஒரப்பகுதிகளைச் சார்ந்த.
Semitubular
a. நீள்வட்டாக வெட்டப்பட்ட அரைக்குழாய் வடிவான.
Semi-uncial
a. எழுத்துவடிவ வகையில் இடைநிலையான, முற்காலத் திரள் எழுத்துவடிவத்திற்கும் சிறு விரைவெழுத்து வடிவத்திற்கும் இடைப்பட்ட எழுத்து வடிவஞ் சார்ந்த.
Semivowel
n. அரையுயிர் எழுத்து, மெய்களிடையே அரை அங்காப்புடைய இடையின எழுத்து.
Semmit
n. ஸ்காத்லாந்த நாட்டு உட்சட்டை.