English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sempiternal
a. (செய்.) என்றுமுள்ள, அழியாத, முடிவில்லாத.
Semplice, int.
(இசை.) எளியமுறையில் இயங்குக.
Sempre
adv. (இசை.) கட்டளைக்குறிப்பு வழக்கில் முழுதுறழ்வாக.
Semsester
n. பல்கலைக்கழகங்களில் அரையாண்டு வகுப்பு, பயிற்சிக்கால அரையாண்டுப் பருவம்.
Sen
n. ஜப்பானிய செப்பு நாணயம், 'யென்' என்னும் நாணயத்தின் நுற்றிலொரு பகுதி.
Senarius
n. அறுசீரடி கொண்ட லத்தீன் செய்யுள்வகை.
Senary
n. ஆறன் தொகுதி, அறுசீரடி கொண்ட லத்தீன் செய்யுள் வகை, (பெ.) ஆறு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட, ஆறு ஆறாக எண்ணுதற்குரிய, ஆறு என்னும் எண்ணெ உட்கொண்ட.
Senate
n. பண்டைய ரோமக் குடியரசின் ஆட்சிப்பேரவை, ஆட்சிமன்றம், பல்கலைக்கழக ஆட்சிக்குழு, சட்டமாமன்ற மேலவை, சட்ட மாமன்ற அவை உறுப்பினர் குழு, சட்டமாமன்ற அவை நடவடிக்கை.
Senate-house
n. பல்கலைக்கழகப் பேரவையகம்.
Senator
n. சட்டமாமன்ற மேலவை உறுப்பினர், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர், பண்டைய ரோமக்குடியரசின் ஆட்சிப் பேரவையினர், குடியரசின் ஆட்சிமன்ற உறுப்பினர்.
Senatorial
a. சட்டமமாமன்ற மேலவைக்குரிய, ஆட்சிமன்றத்திற்குரிய, ஆட்சிப் பேரவையின் மதிப்பிற்குரிய.
Senatorially
adv. ஆட்சிப் பேரவை மதிப்புடன்.
Senatus
n. பண்டை ரோம ஆட்சிப் பேரவை.
Send
-1 v. அனுப்பு, செலுத்து, வருவி, போகும்படி தூண்டு, வரும்படி ஏவு, போகும்படி கூறு, வரும்படி சொல்லு, இடம்நாடி போகச் செய், ஆளிடம் போக்கு, கொண்டு செலுத்து, ஊரிதியிற் போக்கு, அஞ்சலில் அனுப்பு, சொல்லியனுப்பு, எழுதியனுப்பு, தகவல் தெரிவி, கடிதமூலந் தெரிவி, எழுதிவரவ
Send
-2 n. அலையிறக்க வேகம், வேகம், எழுச்சி, தூண்டுதல், அலையிறக்கத்தால் ஏற்படும் குதியமிழ்வு, (வினை.) கடற்கல வகையில் அலையிறக்கத்தால் குதியமிழ்வு கொள்ளு, குதிபாய்வுறப்பெறு.
Sendal
n. துகிற்பட்டு, கொடிகளுக்குப் பயன்பட்ட முற்கால உயரிய பட்டுத்துணி வகை.
Sended
v. செண்ட் டூ என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.