English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sensationalism
n. அரசியல் கிளர்ச்சிப்பாங்கு, கிளர்ச்சி நாட்டம், இலக்கியத்துறையில் எழுச்சியூட்டும் பாணி, (மெய்.) புலனடி அறிவுக்கோட்பாடு, புலனுணர்வு உணர்வெழுச்சி அடிப்படையாகவே கருத்துக்கள் ஏற்படுகின்றன என்னுங்கோள்.
Sense
n. புலன், புலனுணர்வு, புலனுணர்வாற்றல், புலனுணர்வுத்திறம், உணர்வாற்றல், உணர்வுத்திறம், தனிஉணர்வுத்திறம், சூழ்நிற உணர்வு, சூழ்நிலையுணரும் ஆற்றல், கூருணர்வு, நுனித்தறி திறம், நுண்ணுணர்வுத்திறம், உள்ளுணர்வுத்திறம், உணர்வுச்செவ்வி, நயஉணர்வுநலம், தகையுணர்வு, மனப்பாங்கு, எண்ணப்போக்கு, எண்ணத்தடம், உணர்ச்சி நுகர்வுக்கூறு, புலனுகர்வுத்திறம், இயலுணர்வு, இயலறிவு, அறிவுநலம், அறிவுநுட்பம், பட்டுணர்வு, செயலறிவு, உட்கருத்து, கருத்துச்சாயல், உணர்வுநேர்மை, நேர்மையுடைய செய்தி, நேர்மையான பேச்சு, கலப்புதிரிபற்ற பேச்சு, சொற்பொருள், கருத்தியைபு, பொருளியைவு, உணர்வுநிலவரம், (வினை.) புலனுணர்வால் அறி, புலன்களால் உணர், மோப்பத்தால் அறி, ஊறுணர்வால் அறி, இயலுணர்வால் கண்டுகொள், இயல்நலம் மதித்துக்காண், உய்த்தறி, இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு, ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Sense-body
n. உயிரின வகைகளின் உடற்பகுதியில் உள்ள தனிப்புல உணர்விற்குரிய தொகுதி.
Sense-capsule, sense-cavity
n. உயிரினங்களில் தனிப்புலனுணர்வு நரம்புகளின் காப்புப் பொதிவு.
Sense-cell
n. புலனுணர்வுறுப்பு உயிர்மம்.
Sense-centre
n. புலனுணர்வு மையம்.
Senseless
a. அறிவற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, உணர்வில்லாத.
Senselessly
adv. அறிவின்றி, பகுத்தறிவில்லாமல்.
Sense-organ
n. பொறியுல உறுப்பு.
Senses
n. pl. இயலறிவுநில, நல்லுணர்வுநிலை, நேர்உணர்வு.
Sensibilities
n. pl. எளிதில் ஊறுபடத்தக்க உணர்ச்சிக்கூறுகள்.
Sensibility
n. ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வுநயம், எளிதில் ஊறுபடுந்தன்மை.
Sensible
a. புலன்களால் உணரக்கூடிய, கணிசமான, எளிதில் கண்டு உணரக்கூடிய அளவு பெரிதான, பாராட்டுக்குரிய, உணர்கிற, கவனிக்கிற, நல்லறிவுடைய, நேர்மைவாய்ந்த, நியாயமான, மட்டான, செயல்முறைக்கு ஒத்த.
Sensitive
n. வசியத்துக்கு உட்படத்தக்கவர், (பெ.) கூச்சமுடைய, மட்டுமீறிய கூருணர்வுடைய, எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க, எளிதிற் புண்படக்கூடிய, புறத்தூண்டுதல்களுக்குரிய, விளைவுகளை உடனுக்குடன் தௌதவாகக் காட்டுகிற, அடிக்கடி மாறுபடுகிற, கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய, (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
Sensitiveness
n. கூச்சம், கூருணர்வுத்திறம், உணர்வுநுட்பம், மட்டற்ற உணர்ச்சி மென்மை, கருவிகள் வகையில்பதிவீட்டு நுட்பம், விலைக்கள வகையில் ஊசலாட்டத் தொய்வு நிலை.
Sensitivity
n. கூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு.
Sensitization
n. பதிவுதிற நுட்பப்பாடு, கூருணர்ச்சிப் பாடு.
Sensitize
v. கூருணர்ச்சிப்படுத்து, கூருணர்ச்சி, மேம்படுத்து, திறநுட்படுத்து, திறநுட்பம் பெருக்கு, நுண்விசைப்படுத்து, நுண்விசை பெருக்கு.
Sensitizer
n. கூருணர்ச்சிபடுத்துபவர், பதிவுதிற நுட்பம் தூண்டும் விசை.
Sensitometer
n. பதிவுமானி, நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி.