English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sensorium
n. உடலின் உணர்ச்சிமையம், மூளை, மூளையின் சாம்பல்நிறப் பொருள், மூளைத் தண்டுவடமுனை, (வில.) நரம்பு மண்டலம் உள்ளிட்ட முழு உணர்வுக் கருவிகள்.
Sensory
a. உணர்ச்சி மண்டலஞ் சார்ந்த, மூளை பற்றிய, உணர்வு பற்றிய, புலன்கள் சார்ந்த, பொறிகள் பற்றிய.
Sensual
a. புலன் மட்டுமே சார்ந்த, புலனுணர்வு மட்டுமேபற்றிய, புலனுணர்வுக்கு ஆட்பட்ட, இழிதகு புலனுகர்ச்சிக்குரிய, புலன் சார்ந்த சிறுதிற இன்ப ஈடுபாடுடைய, இழிதகை இன்பவாழ்வில் தோய்ந்த, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு சார்ந்த, கருத்துக்கள் அனைத்தும் புலன்களாலே ஏற்படுகின்றன என்னுங் கோட்பாட்டை மேற்கொண்ட.
Sensualism
n. புலனின்பத் தோய்வு, இழிதகு புலனின்ப ஈடுபாடு, புலனின்பங்களுக்கு ஆட்படுதல், புலனுணர்வுக்கூற்றின் வற்புறுத்தீடு, அறத்துறையில் புலனுகர்வு நலக்கோட்பாடு, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு.
Sensualist
n. புலனின்பவாணர், தசையின்ப நோக்கினர், புலனின்பநலக் கோட்பாட்டாளர், புலனடி அறிவுக் கோட்பாட்டாளர்.
Sensuality
n. புலனுணர்வுற்கு ஆட்பட்ட தன்மை, புலனுகர்வின்பம், உடல்சார்ந்த இன்பம், சிற்றின்பம், இன்பவாழ்வுத்தோய்வு, மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு.
Sensualization
n. புலனின்பத்திற்கு உட்படுத்துதல், உடலின்பம் வற்புறுத்தும் இழிதகவு, உலோகாயதமயமாக்குதல், புலனடி மூல விளக்கமளி.
Sensualize
v. தோலின்பமுறுவி, உடலின்பம் வற்புறுத்தி இழிதகவுப்படுத்து, உலோகாயதமாக்கி அமை, புலனடி மூலம் காட்டி விளக்கமளி.
Sensuous
a. புலனுணர்வை ஆட்கொண்ட, புலனுணர்வை அடிப்படையாகக் கொண்ட, புலனாற்றல்களுக்கு உட்பட்ட, புலனுணர்வைப் பாதிக்கிற, புலனுணர்வால் எளிதில் பாதிக்கப்பெறுகிற, புலனறிவு சார்ந்த, புலக்காட்சி உணர்ச்சி ஊட்டுகிற.
Sensuousnes
n. தசையின்ப மகிழ்வு.
Sent
v. செண்ட் (1) என்பதன் இறந்த காலம்.
Sentence
n. முற்றுத் தொடர் வாக்கியம், கருத்து, பொருள், கருத்து முடிவு, செய்தி, தீர்ப்பு, தண்டனை அறிவிப்பு, தண்டனை மேற்கோள், கருத்துரை, பழமொழி, (வினை.) தீர்ப்பளி, தண்டனை முடிவுகூறு.
Sentential
a. (இலக்.) வாக்கியத் தொடர்பான.
Sententious
a. முதுமொழியியல்பான, சூத்திரவாய்பாடு போன்ற, பொருட்செறிவுள்ள, முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய, மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற, எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான, ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Sentience, sentiecny
புலனறிவாற்றல், புலனறிவுடைமை.
Sentient
n. புலனறிவுடைய உயிர், புலனறிவுடைய ஆள், சித்தம், புலனறிவார்ந்த மனம், (பெ.) புலனறிவாற்றலுடைய, புலனுணர்ச்சிவாய்ந்த, புறத்தூண்டுதலுக்குரிய அக எதிர்விளைவு காட்டுகிற, தன்னுணர்வுடைய, புறப்பொருள் நிலை உணர்கிற.
Sentiment
n. உணர்ச்சிக்கனிவு, ஆர்வமதிப்பு, மென்னய உணர்ச்சி, ஆர்வக்கருத்து, கருத்துப்போக்கு, உள்ளுணர்ச்சிப்பாங்கு, ஆர்வக்கொள்கை, உணர்ச்சிவசப்பட்ட கருத்து, விருப்பார்வம், நன்னயக்கருத்துரை, ஆர்வநல்லுரை, உளப்பாடு, மெய்ப்பாட்டுணர்வு, உணர்வுச்சுவை நஸ்க்கூறு, மென்னயப்புணர்ச்சி, ஆர்வப்பகட்டுணர்ச்சி, கட்டற்ற உணர்ச்சி வௌதப்பாடு, உணர்ச்சி ஆபாசம்.
Sentimental
a. ஆர்வமதிப்புச் சார்ந்த, உணர்ச்சிக்கனிவு காட்டுகிற, உணர்ச்சிவயப்படுகிற, மென்னய உணர்ச்சிப்பாங்கான, உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கிற, கூருணர்ச்சிநயப் பசப்புடைய, மென்னய உணர்ச்சிப்பகட்டான, மட்டற்ற அவல உணர்ச்சிகாட்டுகிற, உணர்ச்சி ஆபாசமான.
Sentimentalism
n. உணர்ச்சிக்கனிவு, மென்னய உணர்ச்சிப்பாங்கு, உணர்ச்சி வயப்பட்ட தன்மை, மென்னய உணர்ச்சிக்கூறு.
Sentimentalist
n. உணர்ச்சிப்பகட்டாளர், உணர்ச்சிவசப்பட்டவர், உணர்ச்சிகனிவாளர், பசப்புணர்ச்சியாளர், மென்னய உணர்ச்சிக்கலைஞைர், கூருணர்ச்சிநய ஈடுபாட்டாளர்.