English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sephardi
n. ஸ்பானிய யூதர், போர்ச்சுக்கீசிய யூதர்.
Sepia
n. கணவாய்மீன் வௌதப்படுத்தும் கருமை நீர்மம், கணவாய்மீன் நீர்மத்திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிறமை.
Sepia-drawing
n. பழுப்புவண்ண வகை ஓவியம்.
Sepoy
n. இந்தியப் போர்வீரர்.
Seps
n. பண்டைக்கிரேக்க வழக்கில் நச்சுப்பாம்பு வகை, குறுங்காற் பல்லியின உயிர்வகை.
Sepsis
n. ஊறு நச்சுப்பாடு, காயத்தினால் ஏற்படும் ஊழ்ப்பு, சீழ்த்தொற்று, அழுகல் நிலை, குருதிநச்சுப்பாடு.
Sept
n. இனவழிக் கிளைக்குழு, அயர்லாந்தில் பழங்குடியின உட்பிரிவு.
Septal
a. அயர்லாந்து மக்களிடையே இனவழிக்கிளைக்குழுச் சார்ந்த, இடைவௌதயில் வளர்கிற, (உள்., தாவ., வில.) உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்த.
Septan
a. (மரு.) காய்ச்சல் வகையில் ஏழுநாளுக்கு ஒருமுறை வருகிற.
Septangle
n. (வடி.) எழுகட்டம், எழுகோண வடிவம்.
Septangular
a. (வடி.) எழுகட்டமான, எழுகோண வடிவமான.
Septate
a. (தாவ., வில., உள்.) உறுப்பிடைத் தடுக்கினையுடைய, உறுப்பிடைத்தடுக்காற் பிரிக்கப்பட்ட.
Septation
n. (தாவ., வில., உள்.) உறுப்பிடைத்தடுக்கினாற் பிரிக்கப்படுதல்.
September
n. ஆங்கில ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
Septembrist
n. பிரஞ்சுப் புரட்சியில் 1ஹ்ஹீ2 செப்டம்பர் 2,3இல் நடந்த படுகொலைகளிற் பங்கு கொண்டவர்.
Septempratite
a. (தாவ.) எழுகூறான, ஏழுகூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
Septenarius
n. பண்டை லத்தீன் எழுசீர்யாப்பு வகை, நெடில் குறில் ஈரசை கொண்ட எழுசீரடி யாப்பு.
Septenary
n. ஏழன் தொகுதி, ஏழடிப்படையான உருப்படி, ஏழாண்டுக்காலம், எழுசீர், யாப்புவகை, (பெ.) ஏழன்தொகையான, ஏழினை அடிப்படையாகக் கொண்ட, ஏழு ஏழான, ஏழாண்டுகள் சார்ந்த, ஏழாண்டுக்கொருமுறையான.
Septenate
a. (தாவ.) ஏழு கூறுகளாகப் பிரிவுற்ற, இலைகள் வகையில் எழு கூறான.
Septennate
n. ஏழாண்டுக்காலம், ஏழாண்டுக்கால ஏற்பாடு.