English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sepulchre
n. கல்லறை, சமாதி, சவக்குழி, பிணம் புதைப்பதற்கான நிலவறை, (வினை.) கல்லறையில் கிடத்து, கல்லறையாகப் பயன்படு.
Sepulture
n. புதையீடு, கல்லறையடக்கம்.
Sequacious
a. பின்பற்றிச் செல்லும் பாங்குள்ள தன்தனிநிலையற்ற, தாழ்வு மனப்பான்மையுள்ள, ஆய்வுவகையில் காரண காரியத் தொடர்புள்ள, ஆய்வாளர் வகையில் தொடர்பியைவு நிகழ்த்துகிற.
Sequacity
n. பின்பற்றிச் செல்லும் பாங்கு, தொடர்பிசைவுநிலை.
Sequel
n. பின்கூறு, தொடர்பகுதி, கதைப்பின்தொடர்ச்சி, கதைப்பின்னொட்டுத் தொடர்ச்சி, பின்வரல் விளைவு, தொடர்விளைவு, தொலைவிளைவு, வாத இறுதிமுடிபு.
Sequela
n. (மரு.) நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப்பின்வரல் தளர்வுக்குறி.
Sequence
n. நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
Sequent
n. பின்தொடர் நிகழ்வு, (பெ.) பின்வருகிற, வரிசைமுறையிலுள்ள, அடுத்து வருகிற, பின்விளைவாயுள்ள, தொடர்ச்சியான, இடையறாது தொடர்கிற.
Sequentes, sequentia
பின்வருவன, இன்னும் பின்வருஞ் செய்திகள், பின்வரும் வரிகள், பின்வரும் பக்கங்கள்.
Sequential
a. வரிசைமுறையான, ஒன்றையொன்று பின் தொடர்கிற, தொடர்விளைவான, காரணகாரியமாகத் தொடர்கிற, இடையறாத் தொடர்பான, வரிசைப்பண்புவாய்ந்த, வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட, வரிசைத் தொடரியலான, தொடர்வரிசையாக உருவாகிற, விளைபயனான.
Sequentiality
n. வரிசைத்தொடர்புடைமை, தொடர்வரிசைப்பண்பு, தொடர்விளைவுப் பண்பு, தொடர்விளைவு நிகழ்ச்சி, தொடர்பயன்விளைவு.
Sequentially
adv. வரிசைமுறையாக, தொடர்விளைவாக, வரிசைப்பண்புடையதாக, தொடர்வரிசையாக, உருவாகும் முறையில்.
Sequester
v. தனிமைப்படுத்து, ஒதுக்கமாக்கு, தனிப்பட ஒதுக்கிவை, (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று, (சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று, (சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு, பறிமுதல் செய், பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்.
Sequestered
a. தொலைவொதுக்கமான, பொதுவாழ்விலிருந்து ஒவங்கிய, பொதுப்பார்வையிலிருந்து ஒதுக்கமான, இடவகையில் தொடர்பற்ற, வாழ்க்கை வகையில் தனிமையான.
Sequestral
a. (மரு.) தொடர்பற்று இற்றுப்போன எலும்பு சார்ந்த.
Sequestrate
v. பறிமுதல் செய், உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று, கைப்பற்றித் தனதாக்கிக் கொள், (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று, (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள், கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
Sequestration
n. தனிமை, ஒதுக்கம், ஒதுங்கிய வாழ்க்கைநிலை, அரசியல் சார்பான பறிமுதலீடு, உரிமையற்ற உடைமைப் பறிமுதலீடு, வழக்கு மன்றத் தற்காலக் கைப்பற்றீடு, மூன்றாம் மனிதரிடம் தற்காலப் பொது ஒப்படைப்பு, கடனாளி உடைமை வகையில் தற்காலிகப் பற்றீடு, எலும்பு தொடர்பற்று இற்றுவிழும் நிலை.
Sequestrator
n. அப்பொழுதைக்குப் பறிமுதல் செய்யப்பட்ட உடைமையின் மேற்பார்வைப் பொறுப்பாளர்.
Sequestrotomy
n. (மரு.) இற்றுப்போன எலும்பின் அறுவை மருத்துவம்.
Sequestrum
n. (மரு.) எலும்புக்கூட்டுத் தொடர்பற்று இற்றுப்போன எலும்பு.