English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sequin
n. (வர.) பழைய இத்தாலிய தங்க நாணய வகை, உடுப்புப் பளபளப்புத்தகடு, ஜிகினா.
Sequoia
n. குவிகை வடிவக் காயினையுடைய உயரமிக்க மரவகை.
Seracs
n. pl. பனித்தூணிரை, செங்குத்துப் பாறைகளிற் சறுக்கும்போது மேடுபள்ளங்களால் பிளவுண்டு தூண் தொகுதிகள் போல விழும் பனிப்பாறைப் பாளங்கள்.
Seraglio
n. இஸ்லாமிய வழக்கில் உவளகம், பெண்கள் தங்கும் உள்ளறைத்திரை மாடம், துருக்கிப்பேரரசர் அரண்மனை.
Serai
n. சாத்தகம், வணிகர் கூட்டம் தங்கும் வழிமனை சத்திரம்.
Serang
n. ஆங்கிலேய-இந்திய வழக்கில் கப்பல் தலைமை வேலையாளர்.
Serape
n. கம்பளிப்போர்வை வகை.
Seraph
n. அரமகன், மேலைமரபில் தேவகணங்கள் ஒன்பதில் முதற் கணத்தவர்.
Seraphic
a. அரமகனுக்குரிய, மேலமரபின் உச்சகணத் தேவதூதருக்குரிய, திப்பியன்ன, தெய்விக அழகுவாய்ந்த, விழுமிய, திருத்தூய்மைவாய்ந்த, நயநேர்த்தி மிக்க.
Seraphine
n. (இசை.) முற்கால இசைப்பெட்டி வகை.
Seraskier
n. துருக்கிய படைத்தலைவர், துருக்கிய முதற்பெரும் படைத்தலைவர், துருக்கிய போரமைச்சர்.
Serb, Serbian
செர்பிய நாட்டினர், செர்பிய மொழி, (பெ.) செர்பியா சார்ந்த, செர்பிய மொழி சார்ந்த.
Serbonian bog
n. பண்டை எகிப்திலிருந்த சதுப்பேரிப்பள்ளம், மாயப்படுகுழி, கடக்க முடியா இடர்ப்பாடு.
Sere
-1 n. துப்பாக்கித்தடுக்கு, துப்பாக்கிக் குதிரையின் பற்றுக்கொளுவி.
Sere
-2 a. உலர்ந்து போன, இலைகள் வகையில் சருகாய்ப் போன, மலர்கள் வகையில் வாடிவதங்கிய, மூப்புத் தளர்ச்சியுற்ற, நலிந்த.
Serein
n. கோடைமழை, வெப்பமண்டலப் பகுதிகளில் மேகமற்ற வானிலிருந்து சொரியுந் தூவானம்.
Serenade
n. மாலைவரி, காதலியின் பலகணியருகே சென்று காதலன் மாலைநேரம் பாடும் பாட்டு, முல்லைத் தீம்பாணி, கதை நாடகப் பண்பமையப் பாடப்படும் முல்லை நிலப்பாடல், எளிய பல்லியக்குழு, (வினை.) மாலைவரிப்பாடல் இசை.
Serenata
n. (இசை.) முல்லைத் தீம்பாணி.
Serendipity
n. ஆக்க எதிர்ப்பாடு, ஆகூழின்பம்.
Serene
n. வீறமைதி, வீறொளி, எல்லையற்ற வீறமைதிக்காட்சி, மாசுமறவற்ற வானப்பரப்பு, அலையாடாக் கடற்பரப்பு, (பெ.) வீறமைதிவாய்ந்த, முகில் தடமற்ற, உலைவற்ற, மெல்லமைதி சான்ற, களங்கமற்ற, வீறார்ந்த, மென்மை தாங்கிய, (வினை.) (செய்.) வீறமைவாக்கு, கடல் வகையில் அமைதியுடையதாக்கு, வான்வகையில் மாறுமறுவற்றதாக்கு.