English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Send-off
n. வழியனுப்புதல், விடைகொள் விழா, ஏட்டு மிகு புகழ்ச்சி மதிப்புரை.
Senega, seneka
இருமல் மருந்துவேர்ச் செடிவகை.
Senescence
n. முதுமை கூர்வு.
Senescent
a. முதுமை கூர்வுடைய.
Seneschal
n. இடைக்கால வழக்கில் மாளிகைக் காவலர்.
Sengreen
n. வீட்டு மதிற்கூரைமீது வளருஞ் செடிவகை.
Senile
a. முதுமைத் தளர்ச்சியுற்ற, வயதுசென்றதன் காரணமான.
Senility
n. முதுமை, முதுமை நொய்ம்மை.
Senior
n. மூத்தவர், மூப்பர், முன்னவர், உயர் மதிப்புடையவர், பதவியில் முற்பட்டவர், தேர்ச்சி மிக்கவர், அனுபவ மேம்பாடுடையவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர், பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர், ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர், (பெ.) மூத்த, வயதில மேம்பட்ட, பதவியில் மேற்பட்ட, அனுபவத்தில் முற்பட்ட, மிக்குயர் மதிப்பு வாய்ந்த.
Seniores priores.
(தொ.) மூத்தவர்க்கு முன்னுரிமை, மயின்முறைக்குலத் துரிமை.
Seniority
n. மூப்புநிலை, முன்மை, வயதுமேம்பாடு, மூப்பான வயதுடைமை, மேல்நிலை, பதவியில் முற்பட்ட தன்மை, அனுபவமூப்பு, அனுபவ முதிர்ச்சி மேம்பாடு, தர உயர்ச்சி நிலை, மதிப்பு உயர்நிலை, முந்துரிமைத்தகுதி, மூப்பர் தொகுதி.
Senna
n. மலமிளக்கு மருந்தாகப் பயன்படும் நிலவாவிரை இனச் செடிவகை.
Sennet
n. (வர.) நாடகமேடை அடையாளக் குழலொலி.
Sennit
n. (கப்.) முறுக்கிய வடக்கயிறு.
Senocular
a. ஆறு விழியுடைய.
Senor
n. திரு, திருவாளர்.
Senorita
n. செல்வி, திருமணமாகாத மகளிர் பெயர்முன் அடைமொழி.
Sensation
n. ஊறுகோள் உணர்ச்சி, தொட்டறிவு, உடல் மேற்பட்டறிவு, ஊருதல் உணர்வு, புலனுணர்வு, உளப்பாடு, உளத்திற்படும் உணர்ச்சி, தனி உணர்ச்சிப்பாங்கு, தனிப்பட்ட தோருணர்ச்சி, தனி அனுபவநிலை, உணர்வுக்கிளர்ச்சி, பரபரப்பு, பரபரப்புக் காட்டுதல், கிளர்ச்சி தூண்டுதல், பரபரப்பூட்டுஞ் செய்தி, பரபரப்பினால் ஏற்படும் நிலை, சலசலப்புநிலை, கலவரநிலை, கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
Sensational
a. பரபரப்பூட்டுகிற, மனவெழுச்சியைத் தூண்டுகிற.